பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 அ-2-1 பிறனில் விழையாமை 15

- எனவே, இவ் வல்லொழுக்கம் நிகழாமல் இருப்பதற்கு அறநூல் அறிவே போதும் என்றலால், பொருள் என்னும் சொல் பொருள் நூலை ஆய்ந்து தேர்தல் என்னும் கருத்துக்கே இடமில்லை என்க.

- தன் சார்பாகவும், தன் இல்லறச் சார்பாகவும் எவ்வகையான குற்றம் நிகழக் கூடாது என்று ஒருவன் நினைக்கின்றானோ, அதே குற்றத்தைப் பிறர் சார்பாகவும், பிறரின் இல்லறச் சார்பாகவும் தான் நிகழ்த்தக் கூடாது என்று எண்ணி ஒழுகுவதே பொதுவொழுக்கமும் அறமும் ஆகும், என்க.

2. பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை இல் - பிறனது இல்லறத்திற்குப் பொருளாகி நிற்பவளாகிய அவன் துணைவியை விரும்பி, அவளிடம் தவறாக ஒழுகும் பேதைமை இருப்பதில்லை.

- இவ் விடத்தும், பிறன் பொருளாள் என்பதற்கும் முன்னைய உரையாசிரியர் அனைவரும், பிறனுடைய பொருள்.ஆம் தன்மை யுடையாளை என்றும், பிறனுடைய பொருள் என்றுமே பொருள் தருவர். அது, பெண்மையைத் தாழ்த்தும் உணர்வினைத் தரும் என்க. அஃது ஆசிரியர்க்கு இழுக்குத் தருவதாகும்.

- மனைவி ஒருவனது உயிர்த்துணை. அவளை அவனுடைய உடைமைப் பொருளுள் ஒன்றாகக் கருதுவது மாந்தப் பொதுமைக்கே இழுக்காகும். எனவே பெண்மைக்கு இழுக்குத் தரும் இப்பொருள் சால்புடையதன்று; பெருமையுடையதுமன்று.

- ஆகவே, பிறன் பொருளாள் என்பதற்குப் பிறனது இல்லறத்திற்குப் பொருளாகி நிற்பவளாகிய அவன் துணைவி என்பதாகப் பொருள் தரவேண்டியுருந்தது என்க. இதுவே ஆசிரியர் கருத்தாதல் வேண்டும் என்பது ஒருதலை.

- பெட்டு - விரும்பி

- பெள் து பெட்டு

பெள் விருப்பம். பெண் - விரும்பப்படுபவள். பிறரால், அஃதாவது பெற்றோரால், கணவனால், மக்களால், உறவினரால் என அனைவராலும் விரும்பப் பெறுபவள் பெண்.

ஆனால், பிற ஆடவர் ஒருத்தியை விரும்புவது, திருமணத்திற்கு முன் நிகழினும் திருமணத்திற்குப் பின்னர் நிகழ்வது அல்லொழுக்கமாம் என்க. அக்கால் குமுக நிலை சீர்கெடும் என்பது பொதுவறம். இது கடைப்பிடிக்கப்பெறல் வேண்டும் என்பதே குமுக அமைப்பியலாம்

- .