பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

191


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 191

(தொகுத்த கொடுவினைகளின் விளைவாகி, உயிரொடு இணைந்து,

அதனைத் தாழ்த்துவது)

- என்று விளக்குகிறார்.

. இதற்கு எதிரான சமற்கிருதச்சொல் புண்ணியம் என்பதாகும். இதற்கும் தமிழில் சொல் இல்லை. நல்வினைப் பயன்’ என்றே சொல்லப்பெறுகிறது.

- புண்ணியம் என்பதற்கும் பேரறிஞர் வின்சுலோ விளக்கம் கூறுகையில்

‘Merit of virtuous actions performed in former births attaching to the

sould and, bringing blessings’

முன்பிறவிகளில் செய்த நல்வினைகளின் தகுதிப்பாடுகள் உயிரொடு

தொடர்ந்து வந்து அருள்கின்ற நற்பயன்கள்)

- பாவம், புண்ணியம் ஆகிய இரண்டு சொற்களுக்கும் தமிழில் நேரான தனிச்சொற்கள் இல்லாமலிருப்பது கொண்டே, இக்கோட்பாடுகள் பழந்தமிழர்க்கு உடன்பாடில்லை என்பதைத் தெளிவாக உணரலாம். அதுமட்டுமன்று, பாவம், புண்ணியம் இரண்டு சொற்களுக்கும் ஆங்கிலத்திலும் சரியான சொற்கள் இல்லாமலிருப்பதும் கருதத் தக்கது.

- பாவம்’ என்பதற்கு Sin, Vice, Evil, Crime என்னும் சொற்களே பயன்படுத்தப்பெறுகின்றன. அவை வேறுவேறு பொருள்களையே குறிப்பனவாகும். அவை நேரிடையாகப் பாவத்தைக் குறியா.

Sin - தீமை, கொடுமை; Vice - குற்றம், தீயொழுக்கம்; Evil - கொடுஞ்செயல். கேடு, துன்பம்,

Crime - (5:iplb. -

அதேபோல் புண்ணியம் என்ற சொல்லுக்கும் Virtue, moral, religious merit, purity, holiness argrgotb Gospoan Lucri G35.3LD&rpass. . இவை இதற்கு நேரிய பொருள் தருவதில்லை. Virtue. அறம், அறச்செயல், நற்செயல். moral ஒழுக்கம் படிப்பினை religous merit. மதச்சிறப்புச் செயல்

purity. தூய்மை, தூய்மைச் செயல்