பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 அ-2-1 பிறனில் விழையாமை 15

1. தெளிந்தார் இல் - இவர் தமக்குத் தீங்கு செய்யார் என்று தெளிவாக

நம்பியவர் இல்லத்தில்

- ஐயப்பாடின்றி நம்பியதால் தெளிந்தார் என்றார்.

‘ஐயத்தில் நீங்கித் தெளிந்தார் – 353 2. தீமை புரிந்து ஒழுகுவார் - அவர் மனைவியை விரும்புதலாகிய தீமை

செய்து ஒழுகுபவர்.

இல்லத்துத் தீமை புரிதல் என்றதால் மனைவியை விரும்புதலாகிய

தீமை என்பது வருவிக்கப் பெற்றது.

3. மன்ற விளிந்தாரின் வேறு அல்லர் - உறுதியாக இறந்து போனவரைவிட

வேறு அல்லர் இறந்தவரே. ‘ஒழுக்கம் உயிர் (3) என்றலால் ஒழுக்கம் இலாதவர் உயிரிலாத ராகி

இறந்தவரானார். - ‘இனி, இவர் நமக்குத் தீங்கு செய்யார் என்று நம்பியவராக இவர் நடந்து கொள்ளாமையால், அவர் நம்பிக்கைக்குரியவர் இறந்து போனவர் ஆயினார். - இனி, இத்தன்மையினார் கண்டுகொள்ளப்பெற்றால், அவள் கணவனால் உயிருக்கும் ஊறுநேரும் குறிப்பையும் விளிந்தார் என்னும் சொல்லால் உணர்த்தினார் என்க. - விளிவு இறப்பு விளிந்தார் இறந்தார். - மன்ற என்பது உறுதிப்பொருள் தரும் இடைச்சொல்.

- மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் -தொல் : 750 4. முன்னைய குறளில் இத்தீயவொழுக்கம் கொண்டாரைப் பேதை

என்றவர் இதில் பிணம் என்று கடிந்ததால், அதையொட்டி இது வைக்கப்பெற்றது, என்க.

கசச, எனைத்துணையர் ஆயினும் என்னம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல், - #44

பொருள்கோன் முறை : .

தினைத்துணையும் தேரான் பிறன்இல்

புகல், எனைத்துணையராயினும் என்னாம்.