பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 அ-2-1 பிறனில் விழையாமை 15

5. பழி - அவ்வாறு வெளிப்பட்டவிடத்து வரும் பழிச் சொல்லும் .

-பிறனில் பிழைத்தான் எனப்பிறரால் பேசப் படுமேல்

இழுக்காம் - அறநெறிச்சாரம் : 149 செய்தாயேனும் தீவினையோடும் பழியல்லால்

எய்தாது எய்தாது - கம்ப. ஆரணிய. மாரீசன் : 182 ‘கானின் குடிப்பழியாம்’ - நாலடி : 84

6. என நான்கும் இகவாவாம் - ஆகிய நான்கு விளைவுகளும் நீங்காமல்

பொருந்துமாம்.

- என நான்கும்’ என்று எண்ணுப் பெயரால் குறித்தது, கருத்துறுதிக்காக

.

- இகத்தல் நீங்குதல், கடத்தல்,

இகவா நீங்கா X இகவும் . நீங்கும். -

7. இதில் கூறப்பெறும் விளைவுகளை முறையே அச்சம், பகை, பழி, பாவம் - என்று நிரல்படுத்துவதே பொருந்துமெனினும், செய்யுள் அமைப்பு நோக்கியும் பொருஸ்ரீதி நோக்கியும், பகை, பாவம், அச்சம், பழி என முறைப்படுத்தினார், என்க. .

8. முன்னர்க் கூறிய பழியுணர்வுடன், மேலும் மூன்று விளைவுகளைக்

கூறியதால், அதற்குப் பின்னர் நிரல் பெற்றது.

கசன். அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன். .. - - 147

பொருள்கோள் முறை - -

பிறன் இயலாள் பெண்மை நயவாதவன், அறனியலால் இல்வாழ்வான் என்பான். -

பொழிப்பு ை பிறனுடைய இயங்குதலுக்குத் துணையோளாகிய அவன் மனைவியனது பெண்மையை விரும்பாதவனே, அறத்தின் இயங்குதலுக்கு உரிய முறையில் இல்வாழ்வை நடத்துபவன் என்று கூறப்பெறுவான்.

சில விளக்கக் குறிப்புகள் : . - -

1. இது தான் கடைப்பிடித்து ஒழுகும் தனியறத்திற்கும், பொதுவாகக் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய பொதுமை அறத்திற்கும் இயைபு கூறியது. என்னை? . . . .