பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

201


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 201

மனையற வாழ்வியல் நெறிப்படி, தன்னைத்தான் கொண்டொழுகும் ஒருவர் (974) தனக்கெனவுற்ற ஒருத்தியைத் தானாள்வதே தன் முழு ஆளுமைத் திறனையும் வினைவழிப் படுத்தும் ஓர் இயல்பியல், அறிவியல். உடலியல், மனவியல், உலகியல் கோட்பாடாகும் என்க. என்னை ?

அக் கோள்நிலை பிறழ்கின்றவழி, தன் முழு ஆளுமைத் துய்ப்பும், இருபாலார்க்கும் சிதர்வுறும் என்பது உடலியல், பாலியற் கொள்கை என்னை?

ஓரறிவுத் துய்ப்பு இரண்டாகிய வழி, நுகர்ச்சிப் பரப்பு விரிவுறுமாம். என்க. அங்கன் நுகர்ச்சிப் பரப்பு விரிவுறவே. அதன்மேற் செலுத்தும் அறிவழுத்தப் பரப்பும், அறிவாளுமைத் திறனும் குறைவுறுமாம் என்க. எனவே, அவ்விடத்து முற்றாளுமை இராது. மனவுணர்வு வழியினும், உடலுணர்வு வழியினும் இதே விளைவு உருவாதலும் இயல்பாம் f.

முற்றாளுமை இன்மை ஆளுமைக் குறைவேயாம். - இயல்பினமைந்த ஐம்புலத் துய்ப்பாகிய பெண்மை (10) எழுச்சி, ஒருவனின் முற்றாளுமை நிலைக்கே அடங்கி நிறைவுறுவதாகும். முற்றாளுமை இரண்டன்வழிச் சிதர்வுறுமிடத்து, ஒன்றின் ஒரோவழி ஆளுமை இருப்பினும், அதனால் பெண்மை நிறைவுறாதாம், என்க. பெண்மையை நிறைவுறுத்தாதது நிறையாளுமை யன்று; குறையாளுமையே என்றார், என்க. எனவே, இங்கு நிறையாளுமையைப் பேராளுமை - அஃதாவது - பேராண்மை என்று பெருமைப்படுத்தினார் என்க. . { . . . : . - இவ்வுண்மையை 107ஆம் குறளில் குறிப்பாகவும் தெளிவாகவும்

உணர்த்தினார். o: . . . - 2. சான்றோர்க்கு அறன் ஒன்றோ, ஆன்ற ஒழுக்கு - நற்குணங்கள் நிறைந்த சான்றோர்க்குத் தாம் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறி மட்டுமன்று: மிகச் சிறந்தமைந்த தன்னொழுக்கமும் ஆகும். சான்றோர் . ஏறத்தாழ முப்பத்தேழு குணநலன்களும் பண்புகளும் நிறைந்தவர் என்பதை, ஆசிரியர் ஆங்காங்கே வெளிப்படுத்துவார். அத்தகையவர்,

கல்வி கேள்விகளில் சிறந்தவர் 69 நெஞ்சத்தில் நடுநிலைமை உடையவர் எந்நிலையிலும் அதில் கோடாதவர் 115