பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

205


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 205

மக்கள் யாவருமே எல்லா நலத்துக்கும் உரியவர் எனினும், அவரவர் உரிமைக்கு உகந்த பொருள்களைக் கொண்டு, அவரவர் நலன்களைத் துய்த்துக் கொள்வதே வகுக்கப் பெற்ற பொதுமை அறமாக உள்ளது என்பது உணர்தற் பாலது. அதனையே இக்குறளின்கண் அடுத்துவரும் கருத்தால் வலியுறுத்தினார் என்க.

4. பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் - பிறனுக்கு உரிய ஒருத்தியினது

தோள்மேல் சாய்ந்து படியாதவர்.

பிறற்கு பிறனுக்கு

உரியாள் - இல்லற வாழ்க்கைக்கு உரிமைப்படுத்தப் பெற்றவள். அவனுக்கு ‘உரியாள் இவளெனின், இவளுக்கு உரியான் அவன் என்றதும் கூறாது கூறப்பெற்றது. எனவேதான் இங்கு உரிமை என்னும் சொல்லைப் பெய்தார் என்க.

தோள் தோயாதவர் - தோள்மேல் தோயாதவர் . இடக்கரடக்கல்.

- தோள்தோய்தல் - தோள் தழுவுதல், தோள்மேல் சாய்ந்து படிதல், புணர்ச்சியின் உயாவருத்தம் தீரப் பெண்ணின் தோள் மேல் சாய்ந்து படிதல் என்க.

- இது புணர்ச்சிக்குப் பின் நிகழ்வது.

- தோய்தல் - தோளழுந்தப் படுத்தல்.

5. பொதுமை அறம் கருதிய ஒருவர், இன்னொருவரது உரிமை வாழ்க்கையில் தலையிடுவதும், அவரது வாழ்வு நலனையும் கட்டுக்கோப்பையும் சிதைப்பதும் மிகு தவறாகும். அத்தகையவரை எவரும் விரும்பார். எல்லாரும் வெறுப்பர். எனவே, அவர்க்குப் பொது நன்மைகள் வருவதும் குறையும். அதற்கு அவர் உரிமை கோரவும் இயலாது. ஆகவேதான், பிறற்கு உரியாள் தோள் தோய்பவர் பொதுமை நலம் பெறுதற்கு உரியரல்லர் என்று கூறினார் என்க.

ஒருவர் செய்யும் பிற ஒழுக்கக் கேடுகளை அனைவரும் அவ்வளவாகப் பொருட்படுத்த மாட்டார்கள். அவனைப் பல கூறித் திருத்தவும் முற்படுவர். சிலகால் திருத்தியும் விடுவர். ஆனால் பிறனில் விழையும் ஒழுக்கக் கேட்டினை அனைவரும் கூடிக் கடிவர்; அவருடன் தொடர்பு கொள்ளவும் விரும்பார். அவரைக் கண்டாலும் முகஞ் சுளிப்பர். எனவே, அனைவர்க்கும் உண்டான பொது உரிமைகள் அவர்க்குத் தடுக்கப்படும் என்றார். இன்னும் சிற்றுாராயின் அவர் ஊராரினின்றும் சிற்சிலகால் ஊரினின்றும் ஒதுக்கி வைக்கப்பெறுதலும் நேரும் என்க.

6. இதில், வெறும் உலகத்து என்று கூறாமல், அச்சந்தரும் கடலால்