பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 அ-2.11 பிறனில் விழையாமை 15

3. இவ்வாறு, அறமல்லாத செயல்கள் பலவற்றுள் ஒரு செயலைப் பிரித்துக் கூறி, அவை செய்யினும் இது செய்தலாகாது என்று தேர்ந்து கூறுதல் நூலாசிரியர் கடைப்பிடிக்கும் ஓர் உத்தியாம் என்க. இது,

‘பல்பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்’ -தொல் : 1610 : 16

எனும் உத்தியாம். இந்நூலின் கண் இதுபோல் வந்த குறட்பாக்களைக் காண்க செய்ந்நன்றியறிதல் அதிகாரத்துள்,

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ - #70

என்றதும், அடக்கமுடைமை அதிகாரத்துள்,

‘யாகாவா ராயினும் நாகாக்க’ . - 127

என்றதும், புறங்கூறாமை அதிகாரத்துள்,

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது - 8

என்று வருவதும், பயனில சொல்லாமை அதிகாரத்துள்,

‘நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று - 197

என்று வருவதும், தீவினையெச்சம்’ எனும் அதிகாரத்துள்,

‘எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வியாது பின்சென்று அடும்’ – 207

என்று வருவதும், பகைத்திறந் தெரிதல் அதிகாரத்துள்,

‘வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க . சொல்லே ருழவர் பகை’ - 872 என்று வருவதும், பெரியாரைப் பிழையாமை அதிகாரத்துள்,

‘ளியார் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார் பிழைத்தொழுகு வார். - 896 என்று வருவதும், அது. - - 4. இவ் வதிகாரத்தின் கண், பிறன் மனைவியைக் குறிக்க, நூலாசிரியர், !

மிகவும் பண்பாடும், பொருண்மையும் நிறைந்த வகையில், ஐந்து புதுப்புனைவுச் சொற்களைப் பெய்திருப்பது, இவரின் தனித்த