பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 அ-2-12 பொறையுடைமை 16

அ-2 இல்லறவியல் அ-2-12 பொறையுடைமை 16

அதிகார முன்னுரை

பொறையுடைமை என்பது பொறுத்துக்கொள்ளும் தன்மை உடைமை,

பொறை - சுமை.

சுமையை உடல் பொறுத்துக் கொள்ளுதல் போல், பிறர் தமக்குச் செய்யும் தீங்குகளையும், துன்பங்களையும், இன்னாத இழிவுச் சொற்களையும் மனம் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது. -

இஃது, உலகியலில் பொது நடைமுறைக்கான ஓர் ஒழுகல் முறை ஆகும்.

எனவே, இதனை ஆசிரியர் அறவுணர்வின் பாற்படுத்தி வலியுறுத்துவார் ஆயினார். மேலும் இவ்வுணர்வு இல்லறத்தார்க்கே பெரிதும் வேண்டியதால், இல்லறவியலில் இதனைச் சேர்த்தார். -

பொறுத்துக் கொள்ளுதல், தாங்கிக் கொள்ளுதல், நோன்று கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய தொடர்கள் ஒருசார்புப் பொருளுடையன.

பொறை - சுமை - உடல் தாங்கும் சுமை.