பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

213


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 23

பொருந்தாத தகாத சொற்களைப் பொறுத்துக் கொள்வதுதான் என்பார், ஆசிரியர்,

“தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ - #5, # ‘ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை - 57.9

அத்தகையவர்கள், உலக இன்பங்களை யெல்லாம் துறந்து, உயிரினங்கள் உள்ளிட்ட மாந்தர் அனைவரும் பொறுத்துக் கொள்ள இயலாத தம் உடற்பசியையும் பொறுத்துக் கொண்டு, தவம் நோற்பவர்களை விடவும் சிறந்தவர்கள் - பெரியவர்கள் - என்றுரைப்பார், ஆசிரியர்.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்’ - #59 ‘உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் - 160

இனி, சான்றோர் பிறரும், மற்றவர் கூறும் இன்னாச் சொற்களைப் பொறுத்துக் கொள்வதையே பெரிதாகக் கூறுவதைக் காணலாம்.

பெரும்பாலும், பிறரைப் பழித்தும் இழித்தும் கூறுபவர்கள், தமக்கு இணையில்லாதவர்களாக - தாழ்ந்தவர்களாக கயவர்களாக அறிவில்லாதவர்களாக அல்லது அறிவிருந்தும் பேதையர்களாக தம்மை மதியாதவர்களாகவே இருப்பர். அத்தகவிலார்கள் கூறும் பழிச்சொற்களையும், இழிசொற்களையும் பொறுத்துக் கொள்வதே தம் தகுதிக்கு உகந்ததாம் என்பர்.

‘நேர்த்து நிகரல்லர் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர் - நாலடி : 64 ‘கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்

எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர்’ - நாலடி : 66 அறிவெனப் படுவது பேதையார் சொல் நோன்றல் - கலி :133 ‘பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்’ - கலி : 133 பெரியோ ராயின் பொறுப்பது கடனே - வெற்றிவேற்கை : 31 நெறியின் நீங்கியோர் நிரல கூறினும் - அறியா மைஎன்று அறிதல்.வேண்டும். - சிலப். ஊர்காண்.:

நூலாசிரியர் அறக்கூறுகளை வகுத்துக்கூறுமிடத்து, அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை என்றவாறு உடைமைப்பொருளில் கூறுவது, இவையும் மக்களது பொருளுடைமையைப்