பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 அ-2-12-பொறையுடைமை 16

போல் தங்களின் உடைமைச் செல்வங்களாகக் கொண்டு பேணப் பெறவேண்டுவன என்று குறித்தற் பொருட்டாம் என்க.

இனி, அறக்கேடுகளிலேயே பெரியதும் கொடியதுமாகிய அறக்கேடு பிறனில் விழைதல் ஆகையால், அஃதொருகால் கணவன், மனைவியர்பால் நிகழினும் இல்லறத்தில் உள்ளோர், அதனையும் பெரிதாகக் கருதித் தத்தம் எதிர்கால வாழ்வை இழிவும் இழப்பும் பழிப்பும் சிக்கலும் உடையதாக ஆக்கிக் கொள்ளாமல், அதனைக் கண்டித்துப் பொறுத்துத் திருத்திக்கொள்ள வேண்டுமென்று அறநோக்கான் கருதியே, இப் பொறையுண்டமையைப் பிறனில் விழையாமை அதிகாரத்தை அடுத்து வைத்தார் என்க. -

கருக. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை. - 151 வருள்கள் முறை இயல்பு.


: தன்னை ஆழத் தோண்டிக் குழிபறிப்பாரையும் நிலமானது தாங்கிக் கொண்டிருத்தல் போல், தம்மைச் சொல்லாலும் செயலாலும் இகழ்ந்து, தம் நல்வாழ்வுக்கு ஊறு செய்பவரையும் தாம் பொறுத்துக் கொள்ளுதலே மிகச்சிறந்த பொதுமை அறம் ஆகும்.

1. பொறுத்துக் கொள்ளும் பொதுமையறத்தில் தலையாயதும், மிகச் சிறந்ததும் ஆகியது, பிறர் தம்மை இழிவு செய்தலையும் தம் நன்னிலைக்கு இடையூறு செய்தலையும் பொறுத்துக் கொள்ளுதலே ஆகும் என்பதற்கு இதை அதிகாரத்து முதற்குறளாக வைத்தார் என்க. 2. அகழ்வுரைத் தாங்கும் நிலம்போல - தன்னை ஆழத் தோண்டிக்

குழிபறிப்பாரையும் நிலமானது தாங்கிக் கொண்டிருத்தல் போல. அகழ்தல் - ஆழத்தோண்டிக் குழிபறித்தல். குழிபறித்தல் நிலத்துக்கு

ஊறுசெய்யும் செயல்ால் வருவித்தது. . - தோண்டுதலோடு அமையாது குழிபறிக்கும் நோக்கத்தையும் குறித்தது. தோண்டுதல் இகழ்வதும் குழிபறித்தல், தம் நன்னிலைக்கு ஊறு செய்தலும் சேர்ந்து, உவமை உவமேயத்தோடு நன்கு பொருந்துவதாகும் என்க. . . . - - - தாங்குதல் பொறுத்தல், குழிபறிப்பாரைத் தாங்கிக் கொள்ளுதல்

சுமந்து நிற்றல் .