பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

217


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 217 கருஉ பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று. - 152

பொருள்கோள் முறை :

என்றும் இறப்பினைப் பொறுத்தல் நன்று) அதனை மறத்தல் அதனினும் நன்று.

பொழிப்புரை எந்த நிலையிலும் பிறர் அளவுமீறிச் செய்யும் கொடுமையைப் பொறுத்துக் கொள்ளுதல் நல்லது. அவ்வாறு பொறுத்துக் கொள்வதினும், அவர் செய்த அத்தீமையை மனத்தில் வையாமல், மறந்து விடுவது மிக நன்மை பயப்பதாகும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. என்றும் இறப்பினைப் பொறுத்தல் நன்று - எந்த நிலையினும் பிறர் அளவு மீறிச் செய்யும் கொடுமையைப் பொறுத்துக் கொள்ளுதல் நல்லது.

- என்றும் என்றது, எக்காலத்தும், எவ்விடத்தும், எச் சூழலினும் என்று

முந்நிலைப் பொருளும் குறித்தது.

- காலத்தும் என்றது, தமக்குற்ற நல்ல காலத்தும், அல்ல காலத்தும் - என்றவாறு.

- இடத்தும் என்றது, தாம் வாழ்விடத்தும், செல்லிடத்தும் என்றவாறு.

சூழல் என்றது, தாம் தனித்து நின்ற நிலையினும், பலர் சூழ நின்ற நிலையினும் என்றவாறு.

- நல்ல காலத்தும் என்றது, தாம் பொருளும் திறனும் உற்றுத் தமக்குக் கேடுசெய்தாரைப் பொருளாலும் திறனாலும் மேற்சென்று கண்டிக்கவும் தண்டிக்கவும் இயன்ற காலம்

- அல்ல காலத்தும் என்றது, தாம் பொருளும் திறனும் அற்றுத் தமக்குத் தீமை செய்தாரை மேற்சென்று கடியவும் தடியவும் இயலாத காலம். தாம் நலிந்துள்ள காலம் .

வாழ்விடத்து என்றது, தாம் வலிந்து நின்று ஆளுமை பெற்ற இடம்.

அயலிடம் என்னை? . .. ---. .--.