பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

அ-2-12 பொறையுடைமை 16




‘நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற - 495

- என்றாராகலின்.

- தனித்து நின்ற நிலை என்றது, தமக்குத் துணையாவார் எவருமில்லாத தனிநிலை.

பலர் சூழநின்ற நிலை என்றது, தமக்குத் துணையாவாரும், தம்மை மதிப்பாரும் சூழ நின்ற பொது அவையம்.

இறப்பினை - அளவு இறந்த மீறிய, கடந்த நிலை, இங்கு அளவுக்கு மீறிச்செய்யும் கொடுமையைக் குறித்தது.

பொறுத்தல் - அத்கு நிலையினும் தான் அறிவையும், மானத்தையும், உடல் எழுச்சியையும் தணித்துப் பொதுமை அறவுணர்வால் பொறுத்துக் கொள்ளுதல்.

நன்று - நல்லது. இச் சொல் யாப்பு இடங்கொடாமையால் தொக்கி நின்றது. அடுத்துள்ள கருத்துத் தொடரில் வந்துள்ள அதனினும் நன்று என்னும் சொற்களில் உள்ள ஒப்பு ‘உம்மையாலும், நன்று எனும் முடிபாலும், இங்கு நன்று’ எனும் தொக்கி நின்ற சொல் வருவிக்கப் பெற்றது. -

பரிமேலழகரும் பாவாணரும் பிறர் சிலரும் பொறுத்தல்’ என்பதையே ஏவல் வினையாகக் கொண்டு கருத்தை முடித்தது பொருந்தாது.

ஆயினும், மணக்குடவரும், காலிங்கரும் அவ்வாறு முடிக்காமல், நன்று’ கொண்டு முடித்தது நன்று.

இனி, நன்று என்பதற்கும் சிறப்பு என்று சிலர் தரும் பொருள் சிறப்பன்று. நல்லது என்பதே செயல்நிலைப் பொருள் என்க. என்னை? சிறப்பு எனும் மெச்சுபொருளால் பயனேது?

நல்லது பொறுத்துக் கொள்ளப் பெற்றான். ஒருகால் மனம் மாறுதலும், பொறுத்தானுக்கு நன்றியுணர்வால் பணிந்து துணையாதலும் கூடுமாகலின்,

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்; அல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கால் என்? - 301

என்னும் குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.