பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 அ-2-12 பொறையுடைமை 16

வறுமை என்பது பொருளின்மை மட்டுமே குறிப்பது. - இன்மை’ பொருளின்மை, அன்பின்மை, பண்பின்மை, பொது

நலமின்மை போன்றவற்றையும் குறிக்கும். - இங்கு ஆசிரியர் குறித்தது பொருளில்லாத வறுமையை மட்டுமன்று. அதற்குவெறும் இன்மையே போதுமானது. ஆனால் அவர் குறிப்பிட விரும்பியது அவனிடமுள்ள வேறு சில இன்மைகளுமாம். எனவே, இன்மையுள் இன்மை என்று குறித்தார் என்க. - வறுமையை எத்தனைமுறை அடுக்கிச் சொன்னாலும் அதற்கு

முழுப்பொருளும் வறுமைதான். - ஆனால், அவர் கூறவந்தது வெறும் வறுமையை மட்டுமன்று; இனி

மிகைப்பட்ட வறுமையையும் அன்று.

அத்துடன் வேறுசில இன்மைகளும் பொருளாவதை, அவர் அடுத்து

வரும் கருத்தால் உணர்த்துவர். . - எனவே, முதலிற் கூறப்பெற்ற இன்மை, இல்லாமையும், அடுத்து வரும்

இன்மை கேடான இல்லாமையுமாம். ஒரு பண்புச்சொல் இருமுறை அடுக்கிவரின், இரண்டாவது சொல்

இயல்பாகவே மிகுதியைக் குறிக்கும்.

(எ-டு)

அழகு அழகு அழகு, மிக அழகு. நல்லது நல்லது நல்லது, மிக நல்லது. இழிவு இழிவு இழிவு, மிக இழிவு. - ஆனால் இங்கு முதல்வந்த இன்மையொடு, ‘உள்’ என்னும் உடைமை குறித்த சொல்லும் சேர்வதால், கேடான, இழிவான, கீழான என்னும் மிகைப் பண்புச்சொல் ஒன்று தேவையாகிறது. .

(எ-டு) இழிவு இழிவு இழிவில் கீழான இழிவு. வறுமையுள் வறுமை வறுமையுள் கேடான வறுமை. கயமையுள் கயமை - கயமையுள் இழிவான கயம்ை. . விருந்து ஒரால் - வரும் விருந்தை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பது.

எத்துணை இல்லாமை அல்லது வறுமை இருந்தாலும், அதன் - காரணமாக, வருகின்ற விருந்தைத் தவிர்ப்பது அல்லது நீக்குவது பரிமேலழகர்) அல்லது விடுவது (பாவாணர் அன்பின்மையையும்,