பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

223


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 223

பண்பின்மையையுமே குறிக்கும்.

- விருந்தோம்பலுக்குப் பொருள் முகாமையில்லை என்பது ஆசிரியர்

கருத்து. என்னை?

அதிகாரத்தை அடுத்த இனியவை கூறல்’, ‘விருந்தோம்பல்’

அதிகாரத்தில் அவர் கூறுபவை இவை :

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - 92

(விருந்துக்கு ஏதாவது ஈவதைவிட, மனமகிழ்ந்து, முகமலர்ச்சி காட்டி,

இனிய சொற்களைக் கூறுதலே போதும்)

இத்துடன் ஒருகுவளை நீர் கொடுப்பது இன்னும் மேலாம்) - அதையடுத்து அதே அதிகாரத்தில் அவர்கூறும் இன்னொரு கருத்தும்

எண்ணத் தக்கது.

‘முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்’ - 93

முகம் மலர்ச்சியுடன் வரும் விருந்தை எதிர்கொண்டு அழைத்து வந்து, இருக்கை தந்து, அவர்தம் முகம் நோக்கி அமர்ந்து, இனிமையாக நோக்கி, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களைப் பேசி மகிழ்விப்பதே பொதுமை அறமாகும் அஃதாவது விருந்தோம்பல்’ அறமாகும்).

- இனி, இதனினும் மிகத்தெளிவாகத் தம்பால் உண்பதற்கே ஒன்றும் இல்லாத ஏழைமை - வறுமை படிந்து இருப்பினும், வந்த விருந்தினர் யாராக இருப்பினும், அவரை அன்புடன் மகிழ்விக்கும் இன்சொல்லால் பேசி நிறைவு செய்வதே போதும். அவர்கள் நம் நிலையைத் தாமே உணர்ந்து, நம்மைத் தாழ்வாக நினைப்பதற்கு இடமில்லை; இவ்வாறு செய்வது நம் வெறுமையையும் போக்கும் . என்னும் கருத்தில்,

துன்புறுTஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறுஉம் இன்சொ லவர்க்கு - - 94 - எனவே, இன்மையை வறுமை என்று பொருள் தருவதினும் இல்லாமை’ என்று பொருள்படுத்துவதே, அத்தகையவர்.பால்,

பொருளில்லாமையுடன் அன்பில்லாமையும் பண்பில்லாமையும், விருந்தோம்பும் தகைமையில்லாமையுங்கூட உண்டு என்பதால், மேலும் அது கேடான இல்லாமையாகும் என்று பொருள் கொள்ளும்படி,