பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

227


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 227

இங்குக் கூறப்பெறினும், உடனுக்குடன், இடைவெளியின்றிச் செயல்படுமாறு ஒருங்கு நிகழ்வனவாகும் என்று உணர்க.

மேலும் உளவியல் படியும், உடலியல்படியும், ஓர் எழுச்சியுணர்வு செயல்படுத்தப் பெறுவழி, அஃது உடலின் கண் தேக்கப்பெற்று, உடல் வலிமையையும் மன வலிமையையும் மிகுவிக்கும் என்பது இயங்கியல் கோட்பாடாகும் என்க.

அவ் வகையில் மடவாரின் தீங்குச் செயல்களால் தூண்டப் பெற்ற வன்மையுணர்வுகள் அறிவென்னும் நீரால் அவித்தொழுகலாற்றின், அவ்வன்மை மேலும் வன்மை பெறும் என்னும் இயங்கியல் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இங்குநூலாசிரியர் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை என்று கூறினரே யன்றி, இலக்கிய நயத்திற்காகவோ, அறப்பெருமையை மிகுவித்தற்கோ கூறவில்லை என்பதை உணர்தல் வேண்டும்.

- விருந்தோம்பாததை முன்னரே மடமை என்றும், அது மடவார்கண்

உண்டு என்றும் ஆசிரியர் முன்னரே கூறியுள்ளமை இங்கு நினைவுகூரத் தக்கது.

‘உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா

- மடமை மடவார்கண் உண்டு - 89

3. இனி, இக்குறளில் ஆசிரியர் கையாண்டுள்ள இன்மையுள் இன்மை ‘வன்மையுள் வன்மை’ எனும் சொல் நயமும் சொல்லமைப்பும், இந்நூலுள் வேறு சில இடங்களிலும் கையாண்டுள்ளது கண்டு மகிழத் தக்கது. பெரும்பாலும் இத்தகைய சொல்லாட்சியைத் தமிழ் இலக்கியப் பரப்பில் வேறு புலவர் எவரும் கையாளவில்லை என்பது ஆசிரியரின் தனிச் சொல்லாட்சி, சிறப்பைக் காட்டுகிறது, என்க. * -

‘செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்’ - 411. இன்மையுள் இன்னாது உடைம்ை - 558 ‘இடும்பைக்கு இடும்பை படுப்பர்’ - 623. ‘இன்பத்துள் இன்பம்,விழையாதான்

துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - 628 கற்றாருள் கற்றார் எனப்படுவர் 22 பேதையின் பேதையார் இல் - 834 அறிவின்மை இன்மையுள் இன்ம்ை. - sa:

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - 854