பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

21


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 21

பரிதியார், பயன் துக்காமல் செய்த நன்றிக்கு எழுகடலும்

(தேவையில்லாத விளக்கம்) நிகரல்ல என்றும், காலிங்கர், ‘உதவியினது நன்மையைச் சீர்தூக்கின் அவ்வுதவித்

தன்மையினது நன்மை கடலினும் பெரியதாம் என்றும், பரிமேலழகரோ, இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தலில்லாராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின் அதன் நன்மை கடலினும் பெரியதாம் என்றுமே கூறுகின்றனர். - இனி, இக்கால உரையாசிரியருள் மொழித்திறன் மிக்க மூதறிஞராகிய தேவநேயப்பாவாணரும், மேற்கண்ட உரையாசிரியர்களை யொப்பவே, இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்குமென்று ஆராயாது ஒருவர் செய்த உதவியின் அருமையை ஆய்ந்து நோக்கின், அதன் நன்மை கடலினும் பெரியதாம் என்றே பொருளுரைத்ததோடன்றி, முன்னைய குறள் கருத்தையும் இணைத்துக் கொண்டு, காலத்தினாற் செய்த நன்றி பயன்தூக்கியதாகவும் இருக்கலாமாதலால், பயன் தூக்காது செய்த உதவியும் ஒருவகையில் பெரியதே என்றார் என்று விளக்கமும் கூறவார்.

- என்றிவ்வாறு கூறப்பெற்ற உரைகள் அனைத்தும் ஒரே உரை கல்லில் உரைத்துக் கண்ட முடிவுகளே ஆகலின் அவற்றுள் சிறப்போ, நூலாசிரியர் கருத்தோ இல்லை என்க.

இதனால், செய்யாமற் செய்யினும், காலத்தினால் செய்யினும், ஒர் உதவி பயன் கருதாமல் செய்ய வேண்டும். அதுவே பெரிது, சிறப்புடையது என்று பரிமாணம் கூறி விளக்கினார் என்க.

மேற்கூறிய மூன்று பாடல்களானும் செய்கின்ற உதவியினது பெருமையும், செய்வாரது சிறப்புத் தன்மையும் விளக்கிக் கூறினார். இனிச் செய்யப்பெறுகின்ற உதவியைப் பெற்றுக் கொள்வார்தம் சிறப்பு நிலைகளைக் கூறுவார்.

க0ச. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். - 104

பொருள்கோள் முறை -

பயன்தெரிவார், தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர்.

பொழிப்புரை: (கருவியாகிய) பொருட் பயனும் கருமமாகிய செயற் பயனும்