பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 அ-2-12 பொறையுடைமை 16

‘ஆற்றுவார் ஆற்றல் இகழாமை

போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை’ - 89.7 ஆற்றுவார் ஆற்றல் பணிதல்’ – 985 ‘இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது’ - #047 ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் - 1110 ‘கொடியார் கொடுமையின் தாம்கொடிய’ - ?169 ‘உணலின் உண்டது அறலினிது - 1326

4. இது, சிறந்த ஓர் எடுத்துக் காட்டைக் கூறி, பிறர், அதுவும் பேதையர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் கோழைமையோ, மென்மையோ அன்று. அது வன்மையுள் மிகவும் வன்மையானது என்று வியந்து கூறி, முன் குறளின் கருத்துக்கு வலிவூட்டியதால், அதன் பின்னர் வைக்கப்பெற்றது, என்க.

5. இஃது எடுத்துக்காட்டு உவமையணிச் செய்யுள்.

கருச. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி ஒழுகப் படும் - 154

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை ஒருவர் வேறு பிற குணநலன்களாலும் அற ஒழுகலாறுகளாலும் நிறைவுற்றிருக்கும் தன்மை அவர்க்கு நீங்காமலும், அவ்வாறு நீங்குவதால் இழுக்கும் தாழ்வும் ஏற்படாமலும் இருக்க வேண்டுமானால், அவரிடம் உள்ள பொறுத்துக் கொள்ளும், உணர்வைக் கைவிட்டுவிடாமல் மதித்துத் தொடர்ந்து கடைப்பிடித்தல் வேண்டும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. நிறையுடைமை நீங்காமை வேண்டின் - ஒருவர் வேறு பிற குணநலன்களாலும் அறவொழுகலாறுகளாலும் நிறைவுற்றிருக்கும் தன்மை அவர்க்கு

நீங்காமலும், அவ்வாறு நீங்குவதால் இழுக்கும் தாழ்வும் ஏற்படாமலும் இருக்க வேண்டுமானால்,

நிறையுடைமை சால்புடைமை. நிறைவு சால்பு. குணநலன்களும், அற ஒழுகலாறுகளும் நிறைந்து நிற்கும் தன்மை.