பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 அ-2-12 பொறையுடைமை 16

‘வாய்மையை இழந்து, பொய்கூற வேண்டிவரும். அத்தீவினை செய்தலும், வாய்மையிழப்பும் சேர்ந்து பெருகி வளர்ந்து,

பகையுணர்வு தோன்றிக் கொலை வரை கொண்டு செலுத்தும். அதன்பின், வாழ்வே சிறப்பிழந்து, முட்டுப்பெற்று, உயிரிழப்பு நேரினும்

நேரும். . - இவ்வாறு, கீழ்மையர் சொல்லும் இழிசொற்களையும் தீமைச் செயல்களையும், பொறுத்துக் கொள்ளாவிடில், அது, படிப்படியே, தாம் முன் கொண்டிருந்த நிறையுடைமைகளை யெல்லாம் ஒவ்வொன்றாகக் கையிழக்கச் செய்து, உயிர்க்கிறுதி தந்து விடுமாகலின், அனைத்து அறவுணர்வுகளுக்கும், சான்றாண்மைக் குணங்களுக்கும் அடிப்படையாகிய, பொறையுடைமையப் போற்றியொழுகச் சொன்னார் என்க. . பொறையுடைமை நீங்கின் வெகுளி (சினம்) தலையெடுப்பது நிறையிழப்புகளைத் தரும் என்பதை, நீங்கான் வெகுளி நிறையிலன் (864) என்பதால் உறுதிப்படுத்தினார், என்க. - போற்றி யொழுகப்படும்’ என்பதில் உள்ள படும் என்னும் சொல், வேண்டும் என்று பொருள்தரும் துணைவினை என்பார், பாவாணர். 3. இஃது, அனைத்து அறக்கூறுகளினும் பொறையுடைமையே தலையாயது, அடிப்படையானது என்று எடுத்துக்கூறி, அதன் இன்றியமையாமையை முடிவாக வலியுறுத்தியதால், முன்னைய மூன்றுக்கும் இறுதியாக வைக்கப்பெற்ற தென்க.

கருரு ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. - 155 பொருள் கோள் முறை: .

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர்.

பொழிப்புரை ஒன்றுமறியாப் பேதையர் கூறுகின்ற கடுஞ்சொற்களையும், செய்யும் தீமைகளையும் பொறுத்துக் கொள்ளாமல், வெகுண்டெழுந்து அவர்களைத் தண்டித்தவர்களை உலகத்தார் ஒரு பொருட்டாக மதியார். ஆனால், அவர்களின் அறியாமையை எண்ணி, அவற்றைப் பொறுத்துக் கொண்டவர்களை உலகத்தார் தம் உள்ளத்தில் வைத்துப் பெருமை நினைந்து போற்றிப் புகழ்ந்து கொண்டிருப்பர். : . . . . . . . . x --