பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 அ-2-12 பொறையுடைமை 16

பனையோலையில் பொதிந்துவைத்து “அலங்கு வெயிற் பொதிந்த தாமரை உள்ளகத் தன்ன - குறுந் : 376 : 56. (அசையும் வெயிற் கதிரை வாங்கிய தாமரை அதைத்தன்

இதழ்களுக்குள்ளே வைத்துப் பொதிந்து கொண்டது போல்)

‘அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு’ - அகம் : 321 : 15. இருள்கழி நெய்தல் இதழ்பொதிந்து - கலி : 145 : 39. தொடையமை பன்மலர்த்தோடு புனைந்து - அகம் , 335 - 13. ‘மிக்க கனம் பொதிந்தநூல்’ - நாலடி : 341.

(கனம் அறம்,

ஊத மக்கள் நலம் கருதி உழைத்த ஏசு பெருமான், தம்மைக் காட்டிக் கொடுத்துக் குறுக்கத்தில் அறையும் கொடுந் தண்டனை பெற்றுத் தந்த ஊதாசு என்னும் தம் உழையனை (சீடனை), அவன் தனக்குச் செய்த கொடுமையைப் பொறுத்து, மன்னிக்குமாறு இறைவனிடம் முறையிட்ட வேண்டுகைக்காக, அவரை இன்றுவரை மக்கள் பேணிக் கொள்வது

3. இஃது, ஒறுத்தார்க்கும் பொறுத்தார்க்கும் உள்ள இழிவு சிறப்புகளைக்

கூறியதால் முன்னதன் பின்னர் வைக்கப்பெற்றது.

கருசு ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ். - 156

பொருள் கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை பிறன் தமக்குச் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாது அவனைத் தண்டித்தவர்க்குத் தாம் தண்டித்த அவ்வொரு நாள் மட்டுமே இன்பமாய் இருக்கலாம். ஆனால், அத்தீமையைப் பொறுத்துக் கொண்டவர்க்கு இவ்வுலகம் அழியும் அளவும் புகழ் இருந்து கொண்டிருக்கும். சில விளக்கக் குறிப்புகள்:

1. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - பிறன் தமக்குச் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாது, அவனைத் தண்டித்தவர்க்குத் தாம் தண்டித்த அவ்வொரு நாள் மட்டுமே இன்பமாய் இருக்கலாம்.

ஹத்தார்க்கு தண்டித்தவர்க்கு அதிகாரத் தலைப்பு நோக்கியும் pTu.

குறள்கள் நோக்கியும், தண்டித்த சூழல் வருவித்துக் கூறப்பெற்றது.