பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

233


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 233

ஒருநாளை இன்பம் - தண்டித்த அவ்வொரு நாள் மட்டுமே இன்பமாய்

இருக்கலாம். 2. பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் - ஆனால், அத் தீமையைப் பொறுத்துக் கொண்டவர்க்கு இவ்வுலகம் அழியும் அளவும் புகழ் இருந்து கொண்டிருக்கும். பொறுத்தார்க்கு - அத்தீமையைப் பொறுத்துக் கொண்டவர்க்கு.

பொன்றும் துணையும் - அழியும் வரையும். இறுதியில் அழியப் பெறும்

பொருள் உலகம் ஆதலின் அது வருவித்து உரைக்கப் பெற்றது.

- பொன்றுதல் அழிதல்.

- இங்கு, இன்றைய அறிவியலார் கூற்றுப்படி உலகம் என்றேனும் ஒருநாள் அழிவுறும் என்னும் கருத்தை, அறிவியல் முளைவிடாத அன்றே ஆசிரியர் தம் மெய்யறிவான் அறிந்து கூறியது, வியந்து போற்றற்

குரியது.

- பொன்றும் துணையும் என்பதற்கு உலகம் உள்ளளவும் என்பதற்குத் தாம் சாமளவும் என்று மணக்குடவரும், உலகம் உள்ள அளவும்: என்று காலிங்கரும் பிறர் சிலரும் பொருள் கூறியது சொற்பொருத்தம் இன்றாம்.

புகழ் புகழ் இருந்து கொண்டிருக்கும் * -

இங்கு ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால், பொன்றாது

நிற்பதொன்றில் (233 என்று ஆசிரியர் புகழ் அதிகாரத்தில் கூறுவது

இனி, பொறுத்தார்க்குப் பொன்றுந்துணையும் புகழ் என்னும் வாய்மையுரைக்கு எடுத்துக்காட்டாக இரண்டொரு வரலாற்று நிகழ்வுகளை இங்குக் காண்க .

இசுலாம் நெறியை உருவாக்கியவரும், வாழ்வு முழுவதும் பிறர்க்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய இறைச்சான்றோரும் ஆகிய முகமதுநபி பெருமகனார்:தாம் வாழ்ந்த மதீனா நகரத்தில், நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட சாலையில் நடந்துசெல்லும் பொழுதெல்லாம், அவர்மேல் குப்பைகளையும் கூளங்களையும் வாரிக் கொட்டியும், இழிவான

அக்கம் பக்கத்துள்ளாரை உசாவிப் பொழுது,