பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 அ-2-12 பொறையுடைமை 16

கொடியவற்றை (பாவாணர்) என்றே பலவாறு பொருள் கொள்ளுவர்.

. ஆனால் இப்பொருள் அந்தச் சொல்லுக்கு எந்த வகையானும்

பொருந்தாது, அஃதொரு கருது பொருளே.

. எனவே, அதற்குரிய சரியான பொருள், தான் தாங்கிக் கொள்ளும் திறனல்லாதவற்றை என்பதுதான். இதுவே அனைத்து வகையானும் பொருந்து பொருள் என்பதைச் சொல்லியலும் சொற்பொருளியலும், மனவியலும் அறிந்தவர் உணர்வர் என்க.

தான் தாங்கிக்கொள்ள இயலாதவற்றை ஒருவன் தனக்குச் செய்யினும், அதைத் தாங்கிக்கொள்வதே பொறையுடைமையின் சிறப்பு ஆகும்

என்க. --

2. நோ நொந்து - அவ்வாறு செய்ததனால், அவர்க்கு நேரவிருக்கும்

துன்பத்திற்காக மனம் வருந்தி, - இங்கு நோ நொந்து என்பதற்கும் பரிமேலழகரும், பாவாணரும், உம்மை எரிவாய் நிரயத்து (நரகத்தில் வீழ்வர்கொல் என்று பரிந்து என்றே, நாலடியார் 58ஆம் பாடலைக் காட்டி விளக்கம் தருதல் உலகியற்குப் புறம்பான வைதிகக் கூற்றாம். - இங்குச் செய்யும் குற்றத்திற்கு, ஒருவன் நிரயத்திற்கு நரகத்திற்குப் போய்த்

தண்டனை பெறுவதென்றல் பொருந்தாத கற்பனைப் புளுகே. - மற்று அஃதாயின், அனைத்துக் குற்றங்கட்குமே, இங்குத் தண்டனை வழங்க அரசும், அறமன்றும் இருப்பதில் பொருளில்லையன்றோ? - அறத்தின் பயன் இறப்பிற்குப் பின்தான் கிடைக்கும் என்பது, அறிவியலுக்கும், உலகியலுக்கும் பொருந்துமாறில்லை. மற்று அறிவியலுக்கும் மெய்யறிவியலுக்குங்கூட ஏற்காது. . - இத்தகைய கற்பனைக் கோட்பாட்டாலேயே, அல்லவை பெருகியும்

நல்லவை குறுகியும் வருகின்றன, என்க. . - இனி, நோ நொந்து’ என்பதற்கு, மணக்குடவர், உலகியலுக்கும்,

மனவியலுக்கும் ஒருவாறு பொருந்தும் வகையில், ‘அவற்றை (அத் தீமைகளைத் தானும் செய்தால் அவர்க்கு உளதாம்

நோவுக்கு நொந்து என்று பொருள் தருவர். - இப்பொருளும் ஒருவகையில் சிறந்ததேயாம். ! . - ஆனால், இதனைவிட, அவ்வாறு தீமை செய்தவன், என்றேனும் ஒருநாள், அல்லது எவ்விடத்தேனும் ஓரிடத்து, அக்குற்றத்திற்கென அரசாலும், அறமன்றத்தாலும், கண்டுகொள்ளப் பெற்றுப் பெறவிருக்கும்