பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11

நன்கு உணர்ந்தவர்கள் (தமக்கு ஒன்று உற்றவிடத்து, அளவிலும் பயனிலும்) தினைக்கு இணையாகப் பிறர் உதவி செய்தாலும், அதையே அவர் பனைக்கு இணையாகக் கருதித் தம் திறமையால் பல மடங்குப் பெருக்கிக் கொள்வர். சில விளக்கக் குறிப்புகள்:

1. பயன் தெரிவார் - செயற் கருவியாகிய பொருளினது பயனும், அதனைக்

கொண்டு ஆற்றும் செயற்பயனும் நன்கு உணர்ந்தவர்கள்.

- இவ் வுலகில் உள்ளார் அனைவர்க்கும் அனைத்துக்கும் பொருள் தேவை என்றாலும், அதைப் பயனுடைய வழிகளிற் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே யாவர்.

- சிறிய பொருள் முதலீட்டைக் கொண்டு அதனையே ஏதானும் தமக்குத் தெரிந்த தொழிலில் அல்லது துறையில் ஈடுபடுத்தி, அதையே நாளடைவில் பலமடங்கு பெருகச் செய்யும் திறமையுடையவர்கள் ஒருசிலரே ஆவர். -

அவர்களையே இங்குப் பயன்தெரிவார் என்று விதந்து கூறுகிறார். பொருட்பயனும் செயற்பயனும் தெரியாதவர்கள், எத்துணைப் பேரளவு பொருளையும் பல ஆரவார வழிகளில் ஈடுபடுத்தி வீணடித்து விடுவது பெரும்பாலார்க்கும் இயல்பாக உள்ள உலகியல், வல்லவற்குப் புல்லும் ஆயுதம் என்னும் பழமொழியை ஒர்க.

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மேல் எழுத்துக்கு நேர். - வாக்குண்டாம் : 2 - என்னும் பாடலையும் காண்க 2. தினைத்துணை நன்றி செயினும் - பயன் தெரிபவர்க்கு அளவிலும் பயனிலும் தினைக்கு இணையாக ஒருவர் உதவி செய்தாலும்.

3. பனைத்துணையாக் கொள்வர் பனைக்கு இணையாக அளவிலும்

பயனிலும் அவ்வுதவியைப் பயன்படுத்திக் கொள்வர். தினை, பனை என்னும் எடுத்துக்காட்டுகளுக்கு மணக்குடவர் முதல் பரிதியார், காலிங்கர், பரிமேலழகர் உள்ளிட்டு இற்றைப் பாவாணர் வரை வெறும் சிறியது, பெரியது - என்னும் அளவுப் பொருள்களையே காணுவர். அது மிகவும் எளிதான அனைவரும் அறிந்த வெளிப்படையான வெள்ளிடைப் பொருளே என்க. இச் சிறப்பில்லாத பொருளை நூலாசிரியர் போலும் நுண்மாண் துழைபுலம் மிக்க அறிவாசிரியர் வரையார், என்று வருந்தியுரைக்க தினைத்துணை, பனைத்துணை என்னும் சொற்களுள் உள்ள துணை என்னும் சொல் வெறும் அளவுப் பொருளை மட்டும் குறித்ததன்று.