பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 அ-2-2 பொறையுடைமை 16

முதலியவற்றின் மிகுதிப்பாட்டால், இயல்பின் மிக்க தீமைகளைச் செய்தவர்களை,

மிகுதியான் - மிகுதியான உடல் வலிமை, மனவலிமை, ஆள்வலிமை, செல்வ வலிமை, சாய்கால் வலிமை, அதிகார வலிமை ஆகியவற்றால்.

- மிகுதியான்’ என்பதற்கு உரையாசிரியர் பலரும் மனச்செருக்கால் என்று மட்டுமே பொருள் தந்துள்ளனர். அது முழுப் பொருளன்று. என்னை? மனச்செருக்கு ஒன்றால் மட்டிலுமே ஒருவன் பிறர்க்குத் தீமை செய்து விடுவதில்லை. அம் மனச்செருக்கிற்குங்கூட அவனிடம் பின்புலமாக உள்ள உடல்வலிமை, ஆள்வலிமை, செல்வவலிமை, சாய்கால் செல்வாக்கு வலிமை, அதிகார வலிமை முதலியவை துணையாக நிற்பது உலகியலால் தெரியக்கூடுவது.

எனவே, அவற்றின் மிகுதிப்பாடுகளையும் சேர்த்தே பொருள் கூறுதல் வேண்டும் மற்றபடி, மிகுதி என்னும் ஒரு சொல்லிற்கே மனச்செருக்கு என்னும் பொருள் வந்துவிடாது.

மிக்கவை - இயல்பின் மிக்க தீமை இயல்புக்கு மாறாகத் தீயவற்றைச்

செய்தல்,

ஏதாவதொரு தவறுநேர்ந்தாலும் கடிந்த சொல்ல வேண்டியதற்கு இழிவாக ஏசுதலும், அறைதல், அடித்தல், உறுப்புகள் ஊறுபடத் தாக்குதல், பொருள் பறித்தல் முதலிய தீயவை செய்தலும் மிக்கவை செய்தலின்பாற்படும். -

- மற்றபடி தவறு ஒன்று நேராதவிடத்து ஒருவரும் தீயவை பேசுதலோ, செய்தலோ நிகழ்த்தார். எனவே, இயல்பின் மிக்க தீயவை செய்தலே ‘மிக்கவை’ என்க. -

- முன்னைச் சொல் போலவே, மிக்கவை என்னும் இச்சொல்லுக்கும் உரையாசிரியர் நேரிடையாக தீயவை என்று பொருள் தருவது மிகைப் பொருளே என்க.

செய்தாரை - செய்தவர்களை.

2. தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாமும் அங்கனே செய்து தோல்வியுறாமல், தம் பொறையுடைமையால் அமைந்திருந்து வெற்றி கொள்வதே தக்கது.

தகுதி - அமைவு, அமைந்திருத்தல்.

தக்கு நிற்றல் தகுதி.

தகுதி அறிவு, பண்பு, தன்மை, ஒழுக்கம், நடுவுநிலை (1) முதலியவாறு

இடம் கருதிப் பல பொருள்படும்.