பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

239


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 239 - இவ்விடத்து அமைதிப்பண்பு என நின்று பொறையுடைமையைக்

குறித்தது. - மற்று, தீமை செய்தார் தமக்குற்ற மிகுதித் தன்மையால் செய்தாராகையால் தாமும் அவருக் கெதிராக, அவரைப் போலவே வெகுண்டெழுந்து ஏதாவது செய்தால், தோல்வியுறுவது உறுதியாகலின், அது செய்யாது பொறையுடைமையின் அமைந்திருந்து அவரை வெற்றிகொள்க என்றார் என்க.

- அமைந்திருந்து வெற்றிகொள்ளுதல் என்பது, அவர் மேலும் மேலும் தமக்குத் தீங்கு செய்யாமல் அடங்கி விடுவதால் அது தமக்கு வெற்றிகொண்டது போலாம் என்க. என்னை?

- தீமை செய்ய முடிந்த அவரை, அவ்வாறு செய்யாமல் தணிப்பது

வெற்றி என்க. -

- இவ்விடத்து, -

தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின்

மேம்பட்டு வெல்க என்பதாம்’

- என்று பரிமேலழகரும்,

‘சரிக்குச் சரிதீங்கு செய்யும் இழுக்க வெற்றி ஒழுக்கத் தோல்வி யென்றும், தீயவை செய்தாரைப் பொறுத்துக்கொள்ளும் ஒழுக்க வெற்றியே உண்மையான வெற்றி யென்றும் உணர்த்தற்குத் தகுதியான் வென்றுவிடல் என்றார். - -

- என்று பாவாணரும் விளக்கங்கள் தருவர்.

3. இது, வலிமை மிகுதியினாலே தீங்கு செய்தாரையும் தம் பொறையுடைமை வலிமையினாலே வென்றுவிடல் சாலும் என்று முன்னையதை யொட்டிக் கூறியதால் அதன் பின்னர் வைக்கப்பெற்றதென்க . . . . . . .

கருசு துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர். . 3

பொருள்கோள் முறை: .:- - - - - - - *

இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர், துறந்தாரின் தூய்ம்ை உடையர் :

- 159