பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 அ-2-12 பொறையுடைமை 16

கசு 0. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின். - 160

பொருள் கோள் முறை : இயல்பு. பொழிப்புரை உண்ணாமை மேற்கொண்டு பசியைப் பொறுத்துத் தவம் நோற்கும் துறவியர் பெரியவர்தாம். எனினும் தாழ்ந்தவர் சொல்லும் இன்னாத கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவரினும் அவர் பிற்பட்டவராகவே மதிக்கப் பெறுவர்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. உண்ணாது நோற்பார் பெரியர் - உண்ணாமை மேற்கொண்டு பசியைப்

பொறுத்துத் தவம் நோற்கும் துறவியர் பெரியவர்தாம்.

உண்ணாது நோற்பார், தமக்குறும் உடற்பசியைப் பொறுத்துக் கொண்டு தவம் மேற்கொள்வதால் பிறரினும் பெரியராக மதிக்கப் பெறுவர்.

உணவு உடலுக்கு ஊற்றம் தருவது. உண்ணாதிருப்பின் உடலுற்றம் படிப்படியாய்க் குறைந்துபோம். உடல் நலிவுறும். அந்நிலையில் தவம் மேற்கொள்வது மிகவும் கடினமேயாம். உடல் ஊற்றமிழப்பதால் உடற்புலன்கள் எழுச்சிகுன்றி ஒடுங்கியிருக்கும். உடற்புலன்கள் எழுச்சியின்றிப் போகுமாறு இருத்தலால், சில நாள்களில் பசியும் இயல்பாகக் குன்றிப் போய்விடும். பிறகு பசியடக்க வேண்டியில்லாமலும் ஆகிவிடும். இம்முயற்சிகள் அனைத்தும் செயற்கையாகத் தம் உயிர் நலம் கருதி அவர் செய்வித்துக் கொள்வது. மற்றபடி இம்முயற்சிகளாலும் அவர் தவ மேற்கொள்வதாலும் பிறர்க்கு ஏதும் பயனில்லாது போதல் வெளிப்படை ஆயினும் அம்முயற்சி, செய்வதற்கு அரிதாகலின் அவர் பெரியர் என்று கருதப்பெறுவர். - ‘செயற்கரிய செய்வார் பெரியர். (2) என்றாராகலின். 3 : “i 2. பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் - தாழ்ந்தவர் சொல்லும் இன்னாத கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவரினும் அத்துறவியர் பிற்பட்டவராகவே மதிக்கப் பெறுவர். பிறர்சொல்லும் இன்னாச் சொல் - பிறர் என்றது பேதையரும், தாழ்ந்தவரும்,

கீழ்மையரும். -

அவர் சொல்கின்ற தீய கொடுஞ்சொற்கள் இன்னாச்சொல்.