பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

243


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 243 இனிய அல்லவையும் இனிய பயவாதவையும் இன்னாச் சொற்களாம்.

அவை செவிவழிச் சென்று மனத்தையும் அறிவையும் எழுச்சி கொள்ளச் செய்வன. மானவுணர்வைத் துாண்டி வெகுளியை - சினத்தை உருவாக்குவன.

நோற்பாரின் பின் - எனவே அச் சொற்களை மனவுணர்வாலும் அறிவுணர்வாலும் பொறுத்துக் கொள்பவர், பசியை அடக்கிக் கொள்பவரினும் மிக்க ஆற்றலுடையவராதல் வேண்டும்.

இல்லறத்திலிருந்து கொண்டு பொதுமையறம் பேணும் ஒருவர், தாமுற்ற மனவெழுச்சியையும் அறிவெழுச்சியையும் பிறர்க்காக தம் இல்லறத்துள்ளவர்க்காகவும், தாம் கடைப்பிடித்தொழுகும் பிற பொதுமைநல அற மேம்பாட்டிற்காகவும் அடக்கிக் கொள்ள வேண்டியவர் ஆகிறார். எனவே அவர் ஆற்றல் மிகவும் வலியதும், பொதுநலம் சான்றதுமாம் என்க.

- மற்று, உண்ணாது நோற்பவர்க்கு உணர்வெழுச்சியில்லை. உணர்வடக்கமே உண்டு. எனவே, அவர் யார் மேலும் சினமோ, கொடுநினைவோ கொள்ள வழியில்லை.

- இவ்வாறு எழுச்சியுணர்வற்ற ஒருவர். தன்னலத்துக்காக அடங்கிக் கிடப்பதே இயல்பு. அவர் அடக்கியது உடற்பசியையே. அஃதாவது வெறும் தசைப்பசியையே. அது மற்ற பொதுமாந்தரைக் காட்டிலும் இவர்க்குப் பெரிதாக இருக்கலாம். அதன்பொருட்டாகவே இவர் பெரியர் என்று மதிக்கவும் பெறலாம்.

- ஆனால், பிறர் கூறும் சொற்கள் மனம், அறிவு, உடல் மூன்றினையுமே எழுச்சி கொள்ளச் செய்வன. அதனால் உயிர்த் துடிப்பும் குருதிக் கொதிப்புங்கூட உண்டாகக் கூடுவன.

இத்தகு வுணர்வெழுச்சியை ஒருவர், அதுவும் இல்லறம் மேற்கொண்டிருக்கும் ஒருவர், அடக்கிக் கொள்வதென்பது மிகமிகக் கடினமானதாகும். அத்தகு மிகவும் கடினமான தொன்றைச் செய்பவர், அவ்வுண்ணாமை மேற்கொண்டு தவம் மேற்கொள்ளும் துறவியரை விடவும் மிகமிகப் பெரியவரன்றோ? எனவே, அவரின் பின்னர்தாம் இவர் பெருமையும் பெரியவர் என்பதும் ஆகும் என்றார், என்க.

3. இஃது, இவ்வதிகாரப் பொருளின் முற்றமுடிந்த பொருளாகவும், பொறையுடைமை மேற்கொள்ளுவாரின் பெருமையை அனைவரினும் மேம்படுத்திக் கூறுவதாகவும் உள்ளதால் இறுதிக்கண் நிறுத்தப்பெற்ற தென்க.