பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 அ-2-13 அழுக்காறாமை 17

அ-2 இல்லறவியல் அ-2-13 அழுக்காறாமை -17

அதிகார முன்னுரை

‘அழுக்காறாமை என்பது ‘அழுக்காறு கொள்ளாமை என்னும் பொருள் தரும் ஒருசொல். எதிர்மறைத் தொழிற்பெயர்.

அழுக்கறு + ஆ மை.

‘ஆ எதிர்மறை இடைநிலை.

‘மை’ பண்புப் பெயரீறு.

(நன்மை, தீமை, வறுமை, குடிமை என்பவற்றில் உள்ளது போல்)

இவ்விரண்டும் சேர்ந்து உடன்பாட்டுவினைச் சொற்களை எதிர்மறைத் தொழிற்பெயர்ச் சொற்களாக மாற்றுகின்றன.

வரல் வராமை. (எதிர்மறை

தரல் - தராமை. (எதிர்மறை

செலல் - செல்லாமை, (எதிர்மறை

செயல் செய்யாமை. (எதிர்மறை

அவைபோல், “. . . .

அழுக்கறு + ஆ மை அழுக்கறாமை,

அறாமை முதல் நீண்டு ‘ஆறாமை என்று ஆகிறது.