பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

245


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 245

வராமை - வாராமை.

தராமை - தாராமை, - என்பன போல. (பாவாணர். தமிழ் மரபுரை) அழுக்கறு பொறாமைப் படுதலைத்தவிர் ஏவல் முன்னிலை) அழுக்காறு - பொறாமைப்படுதல் (தொழிற்பெயர்) அழுக்காறாமை - பொறாமைப்படாதிருத்தல்,

(எதிர்மறைத் தொழிற்பெயர்) அழுக்காறு - பொறாமை, (பொறு + ஆ + மை) - பொறுத்துக் கொள்ளுதல் என்னும் பொருள்படும் தன்னுணர்வு ஒழுக்கச் சொல், நாளடைவில் உணர்வின் வளர்ந்து, பிறர் ஆக்கத்தைப் பொறுத்துக் கொள்ளாமையாக வளர்ச்சிபெற்று, அவர் மேற்கொள்ளும் பொறாமை உணர்வைக் குறிப்பதாக நிலைபெற்றது.

மற்றபடி, அழுக்காறு என்னும் பொறாமையைக் குறிக்கும் சொல்லாட்சி, திருக்குறள் தவிர வேறு எந்தக் கழகநூல்களிலும் வரவில்லை.

‘பொறாமை என்னும் சொல்கூடப் பொறுத்துக் கொள்ளாமைப் பொருளில்தான் வந்துள்ளதே தவிர, திருக்குறளில் வரும் பொறாமைப்படும் ‘அழுக்காறு என்னும் பொருளில் எந்தக் கழக இலக்கியத்தும் வரவில்லை. தொல்காப்பியத்துள் வரும் பொறாமை (1206-8 என்னும் சொல்லும் பொறுத்துக் கொள்ளாமைப் பொருளிலேயே வருகிறது. - - -

வெளிப்படையாகச் சொன்னால், பொறாமையுணர்வு தரும் எந்தச் சொல்லும் கழக இலக்கியங்களுள் இல்லை. ஆகையால், ஒரு வேளை இந்த உணர்வுங்கூட ஆரிய வரவால் தோன்றிய உணர்வாக இருக்குமோ என ஐயுற வேண்டியுள்ளது. தமிழியற் பண்பாட்டிற்கு உரியதல்லாத உணர்வுக்குச் சொல் ஏது? - -

இன்றைய நிலையில் பொறாமையுணர்வைச் சிறுசிறு வேறுபாட்டுடன் குறிக்க, காழ்ப்பு, வன்மம் இரண்டு சொற்களும் அகராதிகளுள் குறிக்கப்பெறுகின்றன. ஆனால் அவைகூடப் பொறாமையுண்ர்வின் மீறிய சொற்களாகவே விளங்குகின்றன. - . பொறாமை envy-பிறர் ஆக்கம் கண்டு பொறாமை, rp - grudging வெறுப்புடன் கூடிய பொறாமை,

பொறுமை வேறு பாறை வுே “பொறுத்துக் கொள்ளிமை வே.