பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

247


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 247

3. இனி, மனத்தால் வெஃகியதைப் புறவுணர்வாக ஆக்கி, பொறாமைப்பட்டவரைப் பற்றியும், அவர் ஆக்கத்தைப் பற்றியும் பலவாறாகப் பலரிடமும் புறங்கூறுதல் கோள் சொல்லுதல்.

- இது மூன்றாவது நிகழும் குற்றம் புறத்தே நிகழ்வது; அத்துடன் மொழிவழி நிகழ்வது. - . 4. இதையடுத்து, நான்காவதாக நிகழும் குற்றம், அவ்வாறு புறங்கூறும்போது இல்லாததும் பொல்லாததுமாகப் பயனில கூறுவது. இதுவும் புறத்தே நிகழும் மொழிவழிக் குற்றம் என்க.

- ஆக, இவையிரண்டுமே மொழிவழிக் குற்றங்கள் ஆகும், என்க. 5. அதன்பின்னர், தன் பொறாமைக்குக் காரணமானவர்க்குத் தீயது செய்தல். இது ஐந்தாவதாக நிகழும் குற்றம் இதுவும் புறநிகழ்வு.

- இவ்வாறு, இவ் ஐவகைக் குற்றங்களும் மிகுதிப் பட்டுக் கொண்டே போய், இறுதியில் களவு, கொலை நிகழ்வுகளாக வளரும் தன்மையுடையன. - எனவே, அனைத்துக் குற்றங்களுக்கும் அடிப்படைக் குற்றமாக ‘அழுக்காறாமையைக் குற்றங்கள் வரிசையில் முன் வைக்கிறார், என்க.

- இதற்கு முன் நல்லறவுணர்வுகளாகிய அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி யறிதல், நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை - ஆகிய ஒன்பது அறவுணர்வுகள் அறவொழுக்கங்கள் அறக்கடைப்பிடிகள் கூறப்பெற்றன. - இனி, அவற்றையடுத்து, அழுக்காறாமை, வெஃகாமை ஆகிய இரண்டு மன மாசுகளும், அவற்றைத் தொடர்ந்து, புறங்கூறாமை, பயனில சொல்லாமை’ ஆகிய இரண்டு மொழி மாசுகளும், அவற்றைத் தொடர்ந்து, தீவினையைச்சம் எனும் உடல் மாசும் குற்றமும் இல்லறவியலில் கூறப்பெறும் என்க.

பிறவற்றை ஆங்காங்கு அவ்வற்றின் நிகழ்விடங்களுக்குத் தக்கபடி கூறுவார்.

இந்நூலுள் அழுக்காறு பொறாமை) என்னும் சொல், 35, 135, 6, 163

அழுக்கறுப்பான் பொறாமைப்படுவான், 163,

அழுக்கற்று ப்ொறாமைப்பட்டு, - என்னும் வகையில் பயன்படுத்தப் பெற்றிருக்கின்றன.