பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 அ-2-13 அழுக்காறாமை -17

இச்சொல், வேறு கழக இலக்கியங்களுள் இப்பொருளில் எங்கும் பிறரால் கையாளப் பெறவில்லையாகலின், இந் நூலாசிரியரே இச்சொல்லை, இந்தப் பொருளில் உருவாக்கிக் கொண்டாராதல் வேண்டும் என்று கருதுதற்கு இடமுண்டு என்க.

கசுக. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து)

அழுக்காறு) இலாத இயல்பு. - $61

பொருள்கோள் முறை :

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு, ஒழுக்காறாக் கொள்க.

பொழிப்புரை : ஒருவன் தன் உள்ளத்தில் மாசுகள் இல்லாமல் இருக்கின்ற இயற்கையான தன்மையைத் தொடர்ந்து தான் பேணுகின்ற ஒழுக்க நெறியாகக் கடைப்பிடிக்க! -

சில விளக்கக் குறிப்புகள் : -

1. இயற்கையாகவே, தொடக்கத்தில் எல்லாருடைய உள்ளத்திலும் மாசுகள்

இல்லாமல் இருக்கும். இதனை இயல்பு என்றார். இயற்கையான படைப்புகள் அத்தனையும் தொடக்கத்தில் மாசுகளற்ற தன்மையிலேயே தூய்மையாகப் படைக்கப் பெறுகின்றன. (பிறவியிலேயேகூட குறைகள் இருக்கும். ஆனால் மாசுகள் இரா). உடல், உள்ளம், அறிவு, ஐம்பொறிகள் முதலிய உயிர்ப்பொருள் கூறுகளும், மழைநீர், காற்று, விசும்பு நெருப்பு, நிலம் ஆகிய பூதப் பொருள்களும், செடி, கொடி, மரங்கள் முதலிய இயற்கைத் திணைகளும் கூட, தொடக்கத்தில் தூய்மையாகப் படைக்கப்பெற்றே, பிறகு படிப்படியாக மாசுகள் எய்துகின்றன. - . . . மாந்தரது உள்ளமும் அவ்வாறே, தொடக்கத்தில், இயற்கையாக மாசுகளின்றியே இருக்கும். உலகியலில் அது படியப் படியத் தான் தன் தூய்மைத் தன்மையை இழக்கின்றது - என்னும் இயங்கியலின், மனவியலின் பேருண்மையை இக்குறள் விளக்குகின்றது மிகு சிறப்பானது. - ... : . - * > . எனவே, தொடக்கத்தில் இருக்கின்ற மாசில்லாத உள்ளத்தின் தூய்மைத் தன்மையத் தொடர்ந்து பேணி, நிலைநிறுத்திக் கொள்வதையே, தான்