பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

249


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 249

கடைப்பிடித்தொழுகும் ஒழுக்கவுணர்வாக, ஒருவன் கொள்ளுதல் வேண்டும் என்று கூறுவது, இப் பாடல், என்க.

2. ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் உள்ளத்தில் மாசுகள் இல்லாமல் இருக்கின்ற இயற்கையான தன்மையை.

ஒருவன்’ என்றது அனைவர்க்கும் பொருந்தும்.

நெஞ்சம் உள்ளம், மனம், அகம்.

நெஞ்சம், உள்ளம், மனம் மூன்றும் ஒருபொருள் குறித்த சொற்களாயினும் அவற்றின் நுண்பொருள்களால் வேறுபடுவன. மனத்தினது மூன்று செயல் நிலைகளை அவை குறிக்கும். . .

மனம் சேர்வது, பொருந்துவது என்னும் பொருளது.

- அஃதாவது, எண்ண அலைகளை வாங்குவது.

நெஞ்சம் - நினைவுகளை இருத்திக் கொள்வது. அடிக்கடி நினைவு கூர்வது.

உள்ளம் நினைவலைகளை உருவாக்குவதும் வெளிப்படுத்துவதும்.

அகம் - உள் மனம் .

ஆழ்மனம், அடிமணம்.

(மிகப் பழைய உணர்வுகள் பொதிந்திருப்பது.

இவற்றின் விரிவான விளக்கங்கள் நிறைவுரையில் கூறப்பெறும்)

அழுக்காறு மன அழுக்குகள்

மண் மாசுகள்.

இலாத இயல்பு - மனத்தில் மாசுகள் படியாமல் இருக்கும் இயற்கையான

இயல்பு நிலையை . . . . . . . . மாசுகள் இல்லாமல் இருப்பதுதான் இயல்பு என்றார். இயற்கையாகத் துய்மையுள்ள ஒருபொருளை, மாசு படியாமல் - தூய்மை கெடாமல் வைத்துக் கொள்வதே நம் முயற்சி என்பார். 3. ஒழுக்காறாக் கொள்க - அதனையே தாம் தொடர்ந்து பேணுகின்ற

ஒழுக்கநெறியாகக் கடைப்பிடிக்க - மனத்தில் அழுக்குச் சேரவிடாமல் கடைப்பிடிப்பதையே தன் புற

ஒழுக்கங்களுக்கு அடிப்படையான அகவொழுக்கமாகக் கொள்க.