பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 அ-2-13 அழுக்காறாமை 17

இலாத இயல்பு என்பது முன்னுரையில் விளக்கப் பெற்றது.

- மனந்துய்மையே (455 முதல் ஒழுக்கம். அதுவே ‘நெஞ்சத்து அறம்’

(288) என்றார். 4. இது, பிறனுடைய ஆக்கமும் முயற்சியும் கண்டு பொறாமைப்படாத இயல்பான மனவொழுக்கந்தான், ஒருவனுடைய புற ஒழுக்கங்களுக்கு அடிப்படையானது என்றலின், இதுவே அதிகாரத்து முதற்பாடலாக நின்றது.

கசுஉ. விழுப்பேற்றின் அஃதொப்பது) இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின். - 162

பொருள்கோன் முறை :

யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின், விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை.

பொழிப்புன : எத்தகையவரிடத்தும், அவர்தம் நிலைகண்டு பொறாமை இல்லாத மனவுணர்வை ஒருவன் பெற்றால், பெருமை மிக்க பெறுமதிகளுள் அதைப்போல் சிறந்தது வேறு இல்லை. .

சில விளக்கக் குறிப்புகள் :

1 யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் எத்தகையவரிடத்தும், அவர்தம் நிலைகண்டு, பொறாமை இல்லாத மனவுணர்வை ஒருவன் பெற்றால். -

யார் மாட்டும். எத்தகையவரிடத்தும்

‘யார் மாட்டும் என்பதற்கு உரையாசிரியர்கள் அனைவரும் பொதுவாகவே, யார்மாட்டும், யாவர்மாட்டும் என்றே பொருள்

எனவே, சிறிது விளக்கமாக ஒருவர் பொறாமைப் படத் தக்கவர்கள் யார் யாராக இருக்கக்கூடும் என்பதை மனவியல்படி சிந்தித்தல் .ே * டும். : - ‘. & W.

அஃதாவது, தம்மைவிடக் கல்வி, செல்வம், பதவி, அதிகாரம், சாய்கால் உடையவர்கள், தம்மை யொத்தவர்கள், தாம் பகையாக் நினைக்கக் கூடியவர்கள், தம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள் எனப் பல நிலையில் உள்ளவர்களிடத்தும் என்று பொருள்தருதல் வேண்டும்.