பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 அ-2-13 அழுக்காறாமை -17 சில விளக்கக் குறிப்புகள் :

1. பிறனாக்கம் பேணாது அழுக்கறுப்பான் - பிறனுடைய ஆக்கங்களை,

அவனுடைய முயற்சியாலும் உழைப்பாலும் வந்தவை என்று போற்றிக் கொள்ளாமல், பொறாமை கொள்பவன்.

பிறனாக்கம் பிறனது கல்வி, பொருள், பதவி, அதிகாரம் முதலிய

ஆக்கங்களை, - -

பேணாது - அவை அவனுடைய முயற்சியாலும் உழைப்பாலும் வந்தவை

என்று போற்றிக் கொள்ளாமல்,

அழுக்கறுப்பான் - பொறாமை கொள்பவன்.

- பிறனுடைய ஆக்கங்கள் அவனவனுடைய முயற்சியாலும் உழைப்பாலும் வந்தவை என்று கருதுதல் வேண்டும். அவை ஒருவேளை தவறாக வந்தவையே எனினும், அதுபற்றி யெல்லாம் தாம் எண்ணிக் கொண்டிராமல், தமக்குற்ற அற முயற்சிகளிலேயே தாம் கவனம் செலுத்துதல்தான் தம்முடைய ஆக்கத்தைப் பெருக்கிக் கொள்ளும்வழி 6TGs

2. அறனாக்கம் வேண்டாதான் என்பான் - தன்னுடைய அறமுயற்சிகளால்

வரும் ஆக்கங்களை விரும்பாதவனே ஆவான். -

தன்னுடைய இயல்பான அறமுயற்சிகளில் ஈடுபட்டு, அதன்வழித் தனக்கும் பிறர்க்கும் வருகின்ற ஆக்கங்களை விரும்பாதவனே, பிறருடைய ஆக்கங்களைக் கண்டு பொறாமைப்பட்டுக் கொண்டிருப்பான் என்றார்.

- பரிமேலழகரும், காலிங்கரும், பாவாணருங்கூட அறனாக்கம் என்பதற்கு ‘அறமுயற்சிகளால் வரும் ஆக்கம் என்று பொருள் கொள்ளாமல், அறன், ஆக்கம் என்று பிரித்து, ‘மறுமைக்கு வேண்டிய அறனும், இம்மைக்கு வேண்டிய செல்வமும் என்று பொருள் கொள்வது, நூலாசிரியர் கருத்தைத் திரிபு செய்வதாகும். அதற்குக் காரணம் அவர்கள் எதையும் மதவழியாகச் சிந்திப்பதே ஆகும்.

அறத்தின் வழியாக வரும் ஆக்கத்தையே நூலாசிரியர் பலவிடங்களிலும் விதந்து பேசுவார். ஒவ்வொன்றுக்கும் இம்ம்ை, மறுமைக் கோட்பாடுகளையே கொண்டிருந்தால், உலகியலே நடைபெறாது என்க.

ஆசிரியரின் மனவியல் அவரின் பல வகையான சொற்பயன்படுத்தங்களால் தெரிய வருகிறது. ::$.” அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை’ - 32.

‘செப்பம் உடையவன் ஆக்கம் - 112