பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 அ-2-13 அழுக்காறாமை 17

பொழிப்புரை பிறர்மேல் பொறாமை கொள்ளும் தவறான உணர்வினால், தமக்குக் கேடு உண்டாவதை அறிந்து கொள்ளும் அறிஞர்கள், அத்தீய உணர்வினால் அறத்திற்கு மாறான செயல்களைச் செய்ய மாட்டார்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து பிறர்மேல் பொறாமை கொள்ளும் தவறான உணர்வினால், தமக்குக் கேடு உண்டாவதை அறிந்து கொள்ளும் அறிஞர்கள்.

இழுக்காறு அதிகார முறையினால் இழுக்காறு என்பது, அழுக்காறு .

பொறாமை கொள்ளுதலைக் குறித்தது.

ஏதம் - கேடு, துன்பம், குற்றம் (136), (275), (83).

- பொறாமையினால் வரும் கேடு முன்னுரையில் உணர்த்தப் பெற்றது.

அறிந்து முன்கூட்டியே அறிந்து.

‘அறிந்து எனலால் அறியப்பெற்ற அறிஞர்கள் வருவிக்கப் பெற்றது.

என்னை?

அறிவுடையார் ஆவது அறிவார்’ - 427

‘எதிரதாக் காக்கும் அறிவினார்’ . – 429

என்றார் ஆகலின். -

2. அழுக்காற்றின் அல்லவை செய்யார் பிறர்மேல் பொறாமை கொள்ளும் தீய உணர்வினால் அறத்திற்கு மாறான செயல்களைச் செய்யமாட்டார்.

இங்கும் அறிந்து எனும் சொல்லிற்குப் பரிமேலழகரும், அவர் வழிச் செல்லும் பாவாணரும், ‘இருமையிலும் துன்பம் - கேடு - வருதலையறிந்து என்று தம் இயல்புப்படி, இம்மை, மறுமைக் கொள்கைக்கு அரண் சேர்ப்பர். அது மாந்தவியலுக்கு மதவழிச் செய்யும் அச்சுறுத்தம் என்று தவிர்க்க -

3. இஃது, பொறாமையினால் வரும் கேட்டை அறிஞர்கள் முன்னறிவார்களாகையினால், அவர்கள் அவ்வுணர்வினைக் கடைப்பிடியாமை குறிக்கப் பெற்றதால், பிறனாக்கம் பேணாது அழுக்கறுத்தலின் பின்னர் வைக்கப் பெற்றது.