பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

255


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 255

கசுரு. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடுஈன் பது - 165

பொருள்கோள் முறை :

ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்.

பொழிப்புரை பகைவர் கேடு செய்யத் தவறினாலும், பொறாமை கொண்டவர்க்கு, கேடு தருவதற்கு, அப் பொறாமை எண்ணம் ஒன்றே போதும் (வேறு பகைவர் வேண்டியதில்லை) என்க.

சில விளக்கக் குறிப்புகள் :

1 ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது பகைவர் கேடு செய்யத் தவறினாலும்,

(பொறாமை கொண்டவர்க்கு கேடு தருவதற்கு, ஒன்னார் - பொருந்தாதவர்கள் - பகைவர்கள். ஒன்றுதல் - பொருந்துதல். வழுக்கியும் - தவறியும் கேடுசெய்யத் தவறினாலும். - ஒன்னார் என்றதால், வழுக்கியும் என்பதுடன் கேடுசெய்ய என்னும்

செயலெச்சம் வருவிக்கப் பெற்றது. கேடு ஈன்பது - கேடு தருவதற்கு.

ஈன்பது உருவாக்கித் தருவது.

செயப்பாட்டுப் பொருளால் செயப்படு பொருளாகிய பொறாமை கொண்டவர்க்கு என்னும் சொற்றொடர் இங்கும் வருவிக்கப் பெற்றது.

2. அழுக்காறு உடையார்க்கு அது சாலும் பொறாமை கொண்டவர்க்கு, கேடு தருவதற்கு அப் பொறாமை எண்ணம் ஒன்றே போதும் என்க. வேறு பகைவர் வேண்டியதில்லை என்றவாறாம் என்க. - அப் பொறாமை எண்ணம் ஒன்றே, அடுத்தடுத்துப் பல கேடுகளுக்கும் காரணமாகலின். அதுவே சாலும் அமையும் என்றார் விளக்கம் முன்னுரையில் காண்க) - அது வே என்பதன் ஏகாரம் தொக்கது. 3. இது முன்னைய குறளில் உள்ள ஏதம் படுபாக்கு என்பதற்கு மேலும் ஒரு விளக்கம் தருதலின் அதன் பினனர் வைக்கப் பெற்றது, என்க.