பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11

காட்டுவார். இத்துணை விரிபொருளையும் எரிநெருப்பில் தீய்த்துவிட்டு, வெறும்

கரிப்பொருளைக் கருப்பொருள் என்று கண்ட பொதுப் பார்வையை

என்னென்பது என்றிரங்கி விடுக்க,

‘தினையனைத்தே ஆயினும் செய்ததன் றுண்டால் பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் - பனையனைத்து என்றும் செயினும் இலங்கருவி நன்னாட நன்றில்லை நன்றறியார் மாட்டு’ - நாலடி. 344,

- பாங்கறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின்மேல் இட்ட கலம் - வாக்குண்டாம் ; 15 4. இஃது, உதவி பெறுவாரின் தகுதி கூறியது. எனவே முன்னவற்றின் பின் வைக்கப் பெற்றது.

க0ரு. உதவி வரைத்தன்று) உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து. - 105.

பொருள்கோள் முறை

உதவி உதவி வரைத்தன்று உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து

பொழிப்புரை: பெரருள் அளவானும் செயல் அளவானும் ஒருவர்க்குச் செய்கின்ற உதவி அவ்வவ் வளவிலேயே மதிக்கத் தக்கதன்று; அது செய்யப்பட்டவரின் பெருமைக்குத் தக்கவாறு மதிப்பிடப் பெறுவதாகும். சில விளக்கக் குறிப்புகள் -

1. உதவி, உதவி வரைத்து அன்று - பொருள் அளவானும் செயல் அளவானும் ஒருவர்க்குச் செய்கின்ற உதவி, அவ்வவ் வளவிலேயே மதிக்கத் தக்கதன்று. பெரும்பாலும், உலகத்து ஒருவர் மற்றவர்க்கு ஒருகால் செய்கின்ற உதவி, பொருள் அளவினதும் செயல் அளவினதுமே ஆகும். எனவே, அவ்வுதவிக்கு அவர்கள் தரும் மதிப்பும் அவ்வவ் வளவினதாகவே கருதப்பெறுகிறது. உதவி பெற்றவர், செய்தவரைப் பற்றிப் பிறரிடம் மதிப்பிட்டுப் பேசுங்கால், அவர் பெரிதாக என்ன செய்துவிட்டார்? அவரிடம் இருந்தது அல்லது