பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 அ-2-13 அழுக்காறாமை -17

செய்யவள் செயலுக்கு உரியவள்; செல்வ நிலைக்கு உரியவள்; (சிவந்த மேனியள் என்பது இரண்டாம் நிலைப் பொருள். அவள் திருமகள். திரு செல்வம். திருமகள் . செல்வ நிலைக்கு உரியவள்; எனவே செல்வத்தைத் தருபவள்.

- இவ் வுருவகம் ‘ஆரியவியல் சார்பானது; அவரின் தொன்ம (புராணக் கதைகள் வழிப்பட்டது. தமிழியலில் இவ்வுருவக வழக்கு இல்லை.

. இக்காலத்து இலக்குமி லஷ்மி) என வழங்கும் செல்வத்துக்குரிய

தெய்வத்தைக் குறித்தது.

இதேபோல், தவ்வை எனும் சொல் தமக்கை எனும் பொருளது. இத் தெய்வம் இலக்குமிக்கு எதிரான, சோம்பல், முயற்சியின்மை, ஏழைமை ஆகிய இல்லாமைக்கு உருவகமாக வழங்குவது.

- பொறாமை உணர்வுடையவனிடம் செல்வம் இருப்பதில்லை; ஒருவேளை முன்னரே இருப்பினும், விரைவில் அவன் முயற்சியின்மையாலும், சோம்பலாலும் வறுமை எய்திவிடுவான்.

என்னும் கருத்தினை, இவ்வுருவகச் சொற்கள் வழி, ஆசிரியர்,

‘பொறாமை உடையவனை, செல்வ மகள் (செய்யாள்), மனங்கொள்ளாமல் வெறுத்து, அவனிடமிருந்து வெளியேறி விடுவாள்.

அவ்வாறு வெளியேறும் பொழுது, அவனை அவள் தமக்கை (தவ்வையாகிய வறுமை மகளுக்கு அடையாளம் காட்டி அவள் வந்து அங்குத் தங்குமாறு கூறிவிட்டுப் போய் விடுவாள்.’

- என்று உருவகித்துக் கூறுகிறார்.

- இதை இவ்வாறு கூறுவது தேவையில்லாததெனினும், இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலைக்குப் பொருந்தாத தெனினும், அவர் காலத்து மக்கள் நிலைக்கும், ஏன், இக்காலத்து மூட மக்கள் நிலைக்குங்கூட, பொருந்துவது கருதத்தக்கதாம், என்க. - இதுபற்றி முன்னரே (குறள் 84இன் பொருள் விளக்கத்துள்) விளக்கப்

பெற்றுள்ளது. - - நூலாசிரியர், செல்வமகள் என்பதற்குப் பயன்படுத்தும் செய்யாள் 184, செய்யவள் (167), தாமரையினாள் (6) எனும் மூன்று சொற்களும், அவளின் மூத்தவளாகிய வறுமை மகள் என்பதற்குப் பயன்படுத்தும் ‘தவ்வை (67), முகடி (617, 936) ஆகிய இரு சொற்களும், கழக இலக்கியங்களுள் வேறு எங்கும்ே பயன்படுத்தப் பெறவில்லை. - அதேபோல், இவ்வதிகாரத்துள் பயன்படுத்தப்பெறும், ‘அவ்வித்து (167, அவ்விய (169 எனும் இரண்டு சொற்களுங்கூட, கழக இலக்கியங்களுள்

எங்குமே பயிலப்பெறவில்லை.