பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

261


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 261

பொழிப்புரை பொறாமை எனும் ஒப்பிலாத ஒரு கெடும்பன், அஃது உடையவனை, அவன் செல்வத்தை அழித்துத் தீய வழிகளில் கொண்டு சேர்த்து விடும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. அழுக்காறு என ஒரு பாவி - பொறாமை எனும் ஒப்பில்லாத ஒரு

கெடும்பன்.

ஒரு பாவி - என்றதால், ஒப்பிலாமை கூறப்பெற்றது. - பாவி - பாவம் செய்வதற்கு உரியவன். - பாவம் தீவினை (146)

வடசொல்.

(விளக்கம் 146ஆம் குறள் விளக்கத்தில் கூறப்பெற்றது. ஆண்டுக் காண்க) 2 திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் திருவினைச் செற்று செல்வத்தை

அழித்துத் தீய வழிகளில் கொண்டு சேர்த்துவிடும். திரு செல்வம். - - அழகு, சிறப்பு, மேன்மை, பொலிவு, பேறு, தெய்வத் தன்மை, கவர்ச்சி,

துய்ப்பு, பெருமை முதலிய உயர்நிலைப் பொருள்கள் தரும் சொல். அவற்றைத் தருகின்றதால் செல்வத்திற்கும் பொருளானது.

செறுதல் - அழித்தல், கெடுத்தல்.

செற்று அழித்து, கெடுத்து.

- தீயுழி - தீயவழி. - உழி இடம், பக்கம் என்று பொருள்படும் சொல். எனவே தீய இடம்,

தீய பக்கம், தீய வழி எனும் * பொருள் கொண்டது.

. ‘தீயுழி உய்த்துவிடும் என்பதற்கு மணக்குடவர் ‘தீய கதி என்று கூறி, நரகம் என்று விளக்கியும் பரிமேலழகரும் பரிதியும், பாவாணரும் மறுமைக் கண் நரகத்திற் புகுத்தி விடும் என்றும் வேண்டாது பொருள் கூறுவர். - -

- பாவாணர் ஒருபடி மேற்சென்று தியுழி என்பது எரிவாய் நரகத்தின் பெயர் என்று வேண்டாது விளக்கமும் கூறுவார்; அவர் கிறித்துவம் சார்ந்தவர் ஆகலின். -

கிறித்துவமும் வேத மதமாகிய ஆரியமும் இற்றை இந்து மதமும்,