பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 அ-2-13 அழுக்காறாமை 17

இம்மை, மறுமைக் கோட்பாடுகளில் ஒருசார்பினவாகலின் அவர் அவ்வாறு கூறவேண்டுவதாயிற்று.

- மற்று, மோட்சம் நரகம் என்பன அறிவியலுக்குப் பொருந்தா.

ஆரியவியலின் கற்பனைக் கூறுகளே!

- நூலாசிரியரும் அறிவியல் விளக்கமற்ற அக்காலத்தவராகலின், மதஞ்சாராதவரெனினும், மதவியல் கற்பனைகளில் மயங்கியவரே, என்க.

3. இது, முன்னைய குறளில் கூறப்பெற்ற, செல்வம் அழிதலும், வறுமை புகுதலும் ஆகிய கருத்துக்கு மேலும் ஒரு விளக்கம் தருதலின், அதனையடுத்து வைக்கப்பெற்றது.

கசுசு.அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும் - 169

பொருள்கோள் 60 இயல்பு

பொழிப்புரை குறுகிய மனமுடையவனின் ஆக்கக் கூறுகளும், நேர்மையுடையவனின் கேடுகளும் (எவ்வாறு நேர்ந்தன என்று அவர்கள்) எண்ணிப் பார்ப்பின் அவர்களுக்கே புலப்படும். (மற்றவர்க்கு அவ்வாறு எளிதில் புலப்படாது)

சில விளக்கக் குறிப்புகள் : .

1. இஃது, ஓர் உலகச் சிக்கலை முன்னிறுத்திய குறள். அறவுணர்வின் மெய்ம்மத்திற்கு வெல்விளியாக (சூளுரையாக அமைந்த குறள் இது. இதற்கு உண்மைப் பொருள் காணவியலாமையால், ஆரியவியலின் ‘தலைவிதிக் கோட்பாட்டிற்கு இலக்காகிப் போனது இரையாகி நின்றது. ஆரியவியலாரே இதை வேண்டுமென்றே சிக்கலுடையதாக ஆக்கினர்

2. அவ்விய நெஞ்ச்த்தான் ஆக்கமும் குறுகிய மனமுடையவனின் ஆக்கக்

கூறுகளும் 3. . அவ்விய குறுகிய, கோணலுற்ற எனினும் பொருந்தும். நெஞ்சத்தான் - நெஞ்சம் உடையவனின், மனமுடையவன்சின்.

- ஆக்கமும் - ஆக்கக் கூறுகளும்.

செல்வம் எனும் நேரிடைப் பொருளைவிட, செல்வமும் அதன்வழி