பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 அ-2-13 அழுக்காறாமை 17

கெடுதல்களும். அஃதாவன, வறுமையும், செயல்வழி அறிவுவழி, மனவழித் துன்பங்களும்.

- செயல்கள் முட்டுப்படுதலும் ஊதியமின்மையும், பேருழைப்பும்

ஒய்வின்மையும் முதலியன, செயல் வழித் துன்பங்கள்.

z

அறிவு பாராட்டாமை, பேணிக் கொள்ளாமை, அவமதிப்பு, வாய்ப்பின்மை முதலியன அறிவுவழித் துன்பங்கள்.

- பொருளின்மையால், குடும்பம் பேணாமை, உற்றமும் சுற்றமும் இடையூறு தரல், மக்களை மேம்படுத்த வியலாமை, இழிசொல், அவச்சொல் கேட்டல் முதலியன மனவழித் துன்பங்களாம்.

- இவையும், இவையன்னவும் ஒருவனுக்கு முன்வினைப் பயன் வந்துறாமையால் என்றலும், அல்லது தீவினைப்பயனால் என்றலும் எவ்வாறு பொருந்தும்?

- இவ்வத்தனை இடிபாடுகளும், இழிபாடுகளும் பொருளுடைமை ஒன்றின்

வழியே சரியாகும் எனில்,

- பொருளுடைமையும் இன்மையும் மட்டுந்தாம் வினையின் விளைவு

என்றாகாதோ?

அவ்வாறுதாம் எனில் அவ்வினை அறிவுக் குருடும் மனக் கோட்டமும்

கொண்டதே என்க.

- என்றிவ்வாறான கருத்துகளில் சிக்குண்டு, பரிமேலழகர் முதல், பாவாணர் வரையுள்ள உரையாசிரியருள் பெரும்பாலார் உழல்வரெனில், அவர்தம் அறிவுத் தெளிவின்மையும், மத மயக்கப் புதைவுமே காரணமாம் என்று எண்ணி விடுக்க.

4. நினைக்கப்படும் . இத்தகு பொருந்தாநிலைகள் எவ்வாறு நேர்ந்தன என்று அவர்களே எண்ணிப் பார்ப்பாராயின், அவர்களுக்கே அவற்றின் காரணங்கள் புலப்படும். மற்றவர்க்கு அவ்வாறு எளிதில் புலப்படா என்க. என்னை? - - .

- அவ்விய நெஞ்சத்தானுக்கு நேர்ந்துவரும் ஆக்கங்கள், அவன் தவறான, தாறுமாறான, அறமல்லாத, நேர்மையல்லாத, இழிவழிகளில் ஈட்டியவைதாம் என்பதும், . . . -

- செவ்வியான் கேடுகள், தாம் நேர்மை வழியால் முயன்றதும், உண்மை கருதி பொய்கறாமையால் நேர்ந்த இழப்புகளும், ஒழுங்கு கடைப்பிடிப்பதால், ஒழுங்கின்மையால் வரும் வருவாய்கள் கைநழுவிப்போனதும் முதலாகிய இழப்புகளாலும், ஏமாற்றில்லாத