பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 அ-2-13 அழுக்காறாமை -17

நல்லவனுக்குக் கேடு வருவதும், கெட்டவனுக்கு நன்மை வருவதும், ஆராயாமல் கூறுவதுதான் பழவினை என்பதே தவிர, ஆராய்ச்சி செய்து பார்த்துத்தான் அம் மூடக் கருத்தைக் கூற வேண்டுமென்பதில்லை. ஆராய்ச்சி யில்லாததுதானே மூட நம்பிக்கை. அதற்கு ஆராய்ச்சி எதற்கு? கண்ணைமூடிக்கொண்டு அதை நம்பிக்கைவழிக் கூறிவிடலாமே!

இக் கருத்தை நாம் மறுத்துக் கூறுவதுதான் ஆராய்ச்சியின் பாற்பட்டது. அதன் ஆய்வு நிலைமைகளைத் தாம் நாம் முந்தைய பத்திகளில் கூறினோம்.

- இனி, இன்னொரு கருத்தையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள

வேண்டியுள்ளது.

. உலக மக்களிடை பொதுவாகவே ஒரு தவறான நம்பிக்கை ஒன்று உள்ளது. அது மூடநம்பிக்கை என்றாலும் தவறில்லை. ஆனால் மிகவும் கவனிக்கத் தக்கதும் விளங்கிக்கொள்ளத் தக்கதும் ஆகும்.

அஃதாவது, நல்லவனுக்கு செவ்வியனுக்கு - நேர்மை, உண்மை, ஒழுக்கம் இவற்றைக் கடைப்பிடிப்பவனுக்கு இதில் இறைநம்பிக்கையையும் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை; ஆனால் தேவையில்லை) எப்பொழுதும் நன்மைகளே நடக்கும் என்பது. அவனுக்கு இறைவனே அல்லது அவன் வணங்கும் தெய்வமே முன்னின்று உதவுவான் என்பது வரை அந்நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. இந் நூலாசிரியரிடமும் அந்நம்பிக்கை உள்ளது என்பதற்குக் கீழ் வரும் குறட்பாக்களே சான்று.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல’ - (4) ‘குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்’ - (1023)

இவற்றின் பொருள் விளக்கங்களை ஆங்காங்குக் காண்க) - ஆனால் இதனினும் மேலான மாந்த இயங்கியல் உணர்வும் அவரிடத்து

இருந்துள்ளது என்பது,

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் - - 619 - என்னும் குறளால் புலப்படுத்துவார். இதற்குப் பரிமேலழகர் கூறும்

வலக்காரமான உரை ஆண்டு விளக்கப் பெற்று மெய்யுரை காட்டப்பெறும்)