பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

271


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 27

முயற்சியின்றி வந்து விடா. .

- அவன் நிலம் வித்தாமல் விளையாது; உணவின்றி அவன் உடல், நலம்

பெறாது. மருந்தின்றி அவன் நோய் நீங்காது.

- திருடன் அவன் பொருளைத் திருடாமல் போக முடியாது. தீ வைத்தால்

அவன் வீடு எரியாமல் போகாது.

- அவனைக் கொலை செய்தால், அவன் உயிர் போகாமல் இருந்து

விடாது. - .

புத்தன் எவ்வாறு இறந்தான்? அவன் அதுவரை தின்னாமலிருந்து தின்ற பன்றியிறைச்சி அவனைக் கொன்றது.

- சாக்ரடீசு எவ்வாறு இறந்தான்? கொடுக்கப்பட்ட நஞ்சை அவன்

வாங்கி உண்டான் அந்நஞ்சு அவனைக் கொன்றது.

- ஆர்க்கிமிடீசு எவ்வாறு இறந்தான்? உரோமானிய வீரன் ஒருவன்

அவன் தலையை வாளால் வெட்டினான்; அவன் இறந்தான்.

- கலிலியோ எவ்வாறு இறந்தான்? கோபுரத்தின் உச்சியிலிருந்து அவனைத் தள்ளிவிட்டார்கள். கீழே விழுந்து அவன் இறந்தான். அவர்களெல்லாரும் அவ்விய நெஞ்சத்தவர்களா? செவ்வியர்கள்; சிறந்தவர்கள் யாரினும் உயர்ந்தவர்கள்!

- இவன் நல்லவன்; செவ்வியன்; ஒழுக்கமுடையவன்; நேர்மையாளன்: இறை நம்பிக்கையன்; ஆனால், இவனைக் கொலை செய்து விட்டார்களே என்றால், அதுதான் உலகியல்; உலக இயங்கியல்:

- உலகியல், உலக இயங்கியல், பதவியல், அறிவியல் அடிப்படையில். இறையியல் அடிப்படையில்கூட இயற்கைக்கு மாறான விளைவுகள் ஏற்படா? - .

மதவியலில் மட்டும் அவ்வாறு நிகழ்ந்தனவாகக் கதை சொல்லப்படுகின்றன என்றால், அதன் பெருமையை, போலித்தன்மையை வானளாவி உயர்த்திக் கூறுதற்கு, அம்மதவியலார் கொண்ட சூழ்ச்சிகள் அவை மக்களை ஏமாற்ற அவர்கள் கையாளும் தந்திரங்கள் அவை

எனவேதான், அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் அவர்களின் மதவியற் கொள்கைக்கு முரணாக உள்ளனவே என்று, அவற்றுக்கு முன்பிறவி வினைப்பயன் என்று, பொருந்தாத, இல்லாத, உலகியல், உயிரியல், அறிவியல், மெய்யறிவியல் தன்மைகளுக்கு மாறான முறையில் விடை கூறுகிறார்கள். இஃது ஆராய்ந்து கூறுவதும்