பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

277


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 277

வெஞ்சுரம் தேர்ஒட வெஃகிநின்று) அத்தமாச் சிந்தையால் நீர்என்று செத்து - கைந்நிலை : 24 : 1-2 2. பொருள் விரும்புதல் - என்னும் பொருளில் வெஃகுதல்’

‘இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் நல்லதுவெஃகி வினை செய்வார்’

(நல்லது . பொருள்) - பரி : 10 : 87-88

ஆறுஇன்றிப் பொருள் வெஃகி’ - கலி : 10-5

பொருள் வெஃகி. காதலர் முன்னிய ஆரிடை’ - கலி : 10-21 ஆறுஇன்றிப் பொருள் வெஃகி

அகன்ற நாட்டு உறைபவர்’ - கலி : 26 : 20

‘பல்பொருள் வெஃகும் சிறுமையும்’ - திரிகடு : 38 : 3

3. பிறர் பொருள் விரும்புதல் என்னும் பொருளில் வெஃகுதல்:

வேற்றுப் பொருள் வெஃகாது மையில் அறிவினர் செவ்விதின் நடந்து - பதிற்று : 28 : 7-8 நிலம் கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி - அகம் : 205 : 1.0 ‘கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் - திரிகடு : 50:1

இனி, நூலாசிரியரும், இவ்வதிகாரத்தின் கண்ணுள்ள பத்துப் பாடல்களிலும் வெஃகுதல் என்னும் சொல்லை இம்மூன்று பொருள்களிலுமே கையாண்டுள்ளமை காணத்தக்கதாகும்:

விரும்புதல் என்னும் பொருளில்,

‘படுபயன் வெஃகி’ - 172 ‘சிற்றின்பம் வெஃகி’ – 173 ‘அருள் வெஃகி’ . . . . . - 176 பொருள் விரும்புதல் என்னும் பொருளில்,

‘பொருள் வெஃகி’ - 176 நன்பொருள் வெஃகின்’ . - 171 ‘பிறன் பொருள் விரும்புதல் என்னும் பொருளில்,

‘இலமென்று வெஃகுதல்’ - 174 “யார்மாட்டும் வெஃகுதல்’ - 175 வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம்’ - 177

வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் - 178.