பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 அ-2-14 வெஃகாமை -18

‘அறனறிந்து வெஃகா அறிவுடையார்’ - 179 ‘எண்ணாது வெஃகின்’ - - #80 இனி, வெஃகுதல் என்னும் சொல் விளக்கத்தை மொழிநூலறிஞர் பாவாணர், வெள் + கு வெஃகு, வெள்ளுதல் விரும்புதல் என்று குறிப்பர். - தமிழ் மரபுரை வெஃகாமை - முன்னுரை. வெள் என்னும் மூலமும், வெள்ளுதல் என்னும் சொல் வடிவமும், பழந்தமிழ் நூல்களுள் யாண்டும் வந்திற்றில. . வெள் + கு வெள்கு - வெட்கு, - வெள்குதல் வெட்குதல் நாணுதல். - என்னும் பொருளிலேயே வெள்கு பயன்படுத்தப் பெற்றுள்ளது.

மற்று, வெள் - வேள் என்னும் சொல் விருப்பம் என்னும் பொருளில் பயன்பட்டு, விரும்பா என்னும் பொருள்தரும் வேளா என்னும் சொல்லாகக் கழக இலக்கியங்களுள் சில இடங்களில் வந்துள்ளது. வேள் விருப்பம், வேளா விரும்பா

நனவினான் வேறாகும் வேளா முயக்கம்

வேளா - விரும்பாத - கலி:68:21

‘விளங்கிழை பொலிந்த வேளா மெல்லியல்’ - புறம்:341:10 (வேளா மணம் செய்யப்படாத, அஃதாவது ஒருவனால் இன்னும் விரும்பப்படாத)

தாளிலாளர் வேளார் அல்லர்’ - புறம்:207, 5

வேளார் - விரும்பார்)

இனி, வேள் எனும் சொல் மூலத்திருந்துதான், வேட்கு வேட்கை, வேட்குதல், வேட்டல், வேண்டல் முதலிய பல சொற்கள் தோன்றியுள்ளன. அதேபோல், விரும்பு’ எனும் சொல் மூலமாகிய விள் என்பதிலிருந்து, விரும்பு, விழை முதலிய சொற்கள் தோன்றியுள்ளன. எனவே, வெள்கு எனும் சொல், விருப்பம், ஆசை என்னும் பொருளில் வேறு எங்கும் பயன்படுத்தப் பெறவில்லை. வெட்கம் என்னும் பொருளில் பயன்படுத்தப் பெற்றுள்ளதையே காண முடிகிறது. வெள்’ எனும் சொல்மூலம் விருப்பம் எனும் பொருளடையாக, வெள்ளாட்டி ( விருப்பப்பெண், பணிப்பெண், காமக்கிழத்தி, வைப்பாட்டி) எனும் ஒரு சொல்லே வழக்குப் பொருளில் உள்ளது. இச் சொல் நூல் வழக்கிலும் இல்லை. * . . . . ஆனாலும், வெஃகுதல் என்னும் சொல் விருப்பத்தைக் குறிப்பதாகக் கழக இலக்கிய ஆட்சி, முன்னர் காட்டப் பெற்றது.