பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

279


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 279

இனி, விருப்பம், விரும்பாமை என்னும் இரு சொற்களுங்கூட, இந்நூலுள் கையாளப் பெறவில்லை. விருப்பு என்னும் சொல்லே (522 ஒரிடத்தில் மட்டும், இந்நூலுள் பயிலப் பெறுகிறது. - ஆனால், ‘அம் ஈறு பெறாத விருப்பு என்னும் சொல்லும், ‘ஆமை’ ஈறு பெறாத விரும்பு என்னும் சொல்லும், கழக இலக்கியங்களுள்ளும், தொல்காப்பியத்துள்ளும், பரவலாகக் காணப்பெறுகின்றன. மற்று, விரும்பு, விரும்பாமை, விருப்பம் ஆகிய இம் மூன்று சொல் வடிவங்களை உரையாசிரியர்கள் பயன்படுத்தியுள்ளமையும் காண முடிகிறது. ஆனால், வெஃகாமை எனும் ‘ஆமை’ ஈற்று எதிர்மறைச் சொல் விளக்கம், ‘அழுக்காறாமை முன்னுரை பார்க்க இந்நூல் தவிர, வேறு கழக நூல்கள் எதிலும் பயிலப் பெறவில்லை. எனவே, இச் சொல்லாக்க வடிவமும் நூலாசிரியர் ஆக்கிக் கொண்டதாகவே கருதலாம். - இனி, விருப்பம் என்னும் பொருள்தரும் சொற்கள், தமிழில் ஏறத்தாழ முப்பது உள்ளன. அவை பல்வேறு விருப்ப உணர்வுகளைத் தருகின்றன. அவற்றையும் அவற்றின் விளக்கங்களையும், அவற்றுக்கான நேரிய ஆங்கிலச் சொற்களும் கீழே தரப்பெறுகின்றன. தமிழ்ச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை அரிதின் முயன்று இங்குத் தொகுத்துத் தந்ததன் நோக்கம், நுண்ணுணர்வுச் சொற்கள் குறித்த மொழியியல் ஒப்பீட்டறிவுக்கும், ஏறத்தாழ முப்பத்தைந்து மொழிச் சொற்களைத் தன்னகத்தே கடன்கொண்டு தழைத்து நிற்கும் உலகப் பெருமொழிகளுள் ஒன்றான ஆங்கிலத்தின் இற்றை வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கின்ற வகையில் பல்லாயிரம் ஆண்டுகட்கும் முன்னரே துய தமிழில் உணர்வுநிலைச் சொற்கள் எவ்வாறு ஆளுமை பெற்றிருந்தன என்பதையும், அவற்றின் கருத்தியற் பண்பாட்டு வளர்ச்சி நிலைகளையும் நன்கு விளக்குதற்குமே ஆம் என்க. .

விருப்பப் அவற்றுக்கான இற்றைச்சிறந்த பொருள்தரும் பொருள் ஆங்கில மொழியில் சொற்கள் விளக்கம் அவற்றுக்கான சொற்கள்

அன்பு இயல்பான மக்கள் love, charity.

தொடர்பு விருப்பம் அவரி கூடுதலான anxiety

தொடர்பு விருப்பம் - அங்காத்தல், தேங்கி நிற்கும் craving, longing அங்காப்பு விருப்பம்

அறிவார்வம் அறிவறிய விருப்பம் curiosity