பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3CO அ-2-14 வெஃகாமை 18

நேயம், நேசம் (நட்பு விருப்பம்) இரு வடிவங்களும் கழகக் காலத்துள் இல்லை. நயம், நயத்தல் மட்டுமே இருந்துள்ளது.

பற்று (மனமும் அறவும் பற்று விருப்பம்)

‘பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்’ - 88 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்’ - 349 பற்றுள்ளம் என்னும் இவறன்மை’ - 438 ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு’ - 350 பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்’ - 606 ‘பற்றாகின்று, நின் காரணமாக’

“செய்ததன் பயம் பற்று விடாது; நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே’ - கலி:59:25-26 ‘பயன் இன்மையின் பற்றுவிட்டு ஒரூஉம்

நயன்இல் மாக்கள் போல்’ - அகம்:71:2-3 பற்றுஅமையா வேந்தன்கீழ் வாழாமை முன்னிதே’ - இனி.நா.:322 பற்றுஇலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்துஉற்றுப் பாங்கறிதல் வெற்றவேல் வேந்தர்க்கு இனிது - இனி.நா.:35:3-4 ‘பற்றுஎன்னும் பாசத்தளையும், பல்வழியும் பற்றுஅறாது ஒடும் அவாத் தேரும்’ - திரிகடு:22:1-2

‘கோல்அஞ்சி வாழும் குடியும், குடிதழிஇ ஆலம்வீழ் போலும் அமைச்சனும், வேலின் கடைமணிபோல் திண்ணியான் காப்பும், இம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல்’ - திரிகடு:33 ‘மனைவாழ்க்கை பற்றுதல்’ - ஏலாதி:73:3 தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமைஎடுத்துப் பற்றுவேன் என்றுயான் விழிக்குங்கால், மற்றும்என் - நெஞ்சத்து ஒடி ஒளிந்து . . . . . கலி:14:55-56 ‘கையாறு செய்தானைக் காணின் கலுழ்கண்ணால் பையென நோக்குவேன் தாழ்தானை பற்றுவேன்’ - கலி:147:48-49 பத்தி பக்தி வணங்கு விருப்பம் வழிபடு விருப்பம்

பத்திமை சான்ற படையும் -* - திரிகடு:100:1