பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 . அ214 வெஃகாமை 8

‘இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற் றின்றெடுத்த தாய்வேண்டாள் - நல்வழி:34:3 ‘பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான்’ - நீதிநெறி விளக்கம்:19:1 ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால் - மிக்கொள் உயர்வுஇழிவு வேண்டற்க நன்னெறி:22:1-2 “எள்ள திருப்ப இழிஞர்போற் றற்குரியர்; விள்ளா அறிஞரது வேண்டாரே’ - நன்னெறி:33:1-2 - வெற்றிநெடு . வேல்வேண்டும் வாள்விழியாய்! வேண்டா புளிங்காடி பால்வேண்டும் வாழைப் பழம்’ . - நன்னெறி:35:3-4

வேணவா தன் நலம் கருது விருப்பம்)

கேளாய், எல்ல தோழி! அல்கல்

வேணவா நலிய வெய்ய உயிரா

ஏமான் பிணையின் வருந்தின னாக’ - நற்:61:1-3 வெஃகுதல் (பிறர் உடைமை கவர்தல் விருப்பம்)

இஃது, இம்முன்னுரை முற்பகுதியுள் விளக்கப்பெற்றது

இங்குக் காட்டப்பெற்ற விருப்பப் பொருள்தரும் பல்வேறு தமிழ்ச்

சொற்களும், அவற்றுக்கான நுண்பொருள்களும், அவற்றை உறுதிப்படுத்துவதற்கான கழகக்கால, பிற்கால இலக்கிய எடுத்துக்காட்டுகளும், கூடுதலான முயற்சியும் உழைப்பும், விளக்கமும் என்று கருதத் தோன்றினும், அவை இவ்வதிகார விளக்கத்திற்கும் அது தொடர்பாக விளங்கிக் கொள்ளவேண்டிய நுட்ப உணர்வுகளுக்கும் மிகுதேவையாகும்.

பிறன்பொருள் விரும்புவது அறக்குற்றம் மட்டும் அன்று; மறக்குற்றமுமாகும். இவ்வுணர்வு பொதுமை உணர்வுக்கும் பொதுவுடைமை அமைப்பிற்கும் மிகவும் எதிரானதாகும்.

பிறன்பொருள் விரும்புவது, களவுக்கு அடிப்படையானது, கள்வு கொள்ளைக்கு வழிகோலுவது; கொள்ளை, கொலைக்குத் துரண்டுவது; கொலை மாந்த இனத்துக்கு மாறானது. எனவே, இவ்வளர்ச்சியுற்ற உணர்வுக்கு முன்னுள்ள பல்வேறு வகையான மாந்த நேய உணர்வுகள் நுட்பமாகக் காட்டப்பெற்றுள்ளன. அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மாந்தப் பண்பைக் குழிதோண்டிப் புதைக்கும் பிறன்பொருள் விரும்புதல் என்னும் உணர்வின் கனத்த மனநிலை விளக்கம் இங்குக் கூற வேண்டுதல் தேவையாயிற்றென்க.

தன்முயற்சியையும், தன்னொழுக்கத்தையும் கெடுக்கும் இப் பிறன் பொருள் விரும்புதல் மிக அறக்கேடாகும். .