பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

311


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 3

இதன் நுட்பமான அறக்கேடுகள் ஆசிரியரால் இவ்வதிகாரத்தின்கண் நன்கு விளக்கப் பெறுகின்றன.

இவ் வதிகாரம், முந்தைய, பிறர் பொருள் கண்டு பொறாமைப் படுதலாகிய அழுக்காறாமை என்னும் அறக்கேட்டினுக்குப் பின்னர் நிகழும், அதனினும் கூடிய அறக்கேடு ஆகலின், அவ்வதிகாரத்தின் பின்னர் வைக்கப்பெற்றது, என்க.

கண்க. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் - குற்றமும் ஆங்கே தரும். - 171

பொருள்கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை நடுவுநிலையில்லாமல், பிறனுடைய நேர்மை உழைப்பால் வந்த நற்பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பினால், (அக்கெடுதலான எண்ணம் செயலாக வளர்ந்து, அக் கொடுமையும் நேருமானால் அஃது அவ்வாறு செய்தவனின் குடிமுறையையும், அவன் வாழ்தலுற்ற குடிமை நலத்தையும் குறையச் செய்து, அவனுக்கும் பல வகையான குற்றங்களையும், அவற்றுக்கான தண்டனைகளையும் உண்டாக்கித் தரும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. நடுவின்றி - நடுவுநிலையில்லாமல்.

- தான் முயன்று ஈட்டுவதற்குரிய எண்ணமில்லாமல், தன் மன நிலையில் தாழ்ந்து, பொறாமை உணர்வுடன், பிறன் பொருளும் அவன் முயற்சியால் வந்தது என்று எண்ணும் நடுவுநிலை உணர்வில்லாமல்.

பிறன்பொருளைக் கண்டு பொறாமை உணர்வு தோன்றியவுடனேயே

ஒருவனின் நடுவு நிலையுணர்வு பிறழ்ந்து விடுகின்றது என்க.

- நடுவுநிலையுணர்வு இல்லாமற் போனவுடன்தான், ஒருவன் பிறன் பொருளைக் கவர விரும்புகிறான் ஆகலின், அவன் நடுவுநிலை யில்லாமற்போன மனவுணர்வை முதற்கண் சுட்டினார் என்க.

2. நன்பொருள் r - பிறனுடைய நேர்மை உழைப்பால் வந்த

நற்பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பினால்,

- பிறனது உழைப்பால் நேரிய வழியில் வந்த பொருளாதலின் நன்பொருள்

என்றார்.

அவ்வாறில்லாது, தீய வழியில் பிறரீைட்டிய பொருளை வெஃகலாமோ

எனின், அஃது அற்ற்ன்று, பிறன்பொருளை விரும்புதற்கு

அதைக்