பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 அ-2-14 வெஃகாமை - 18

கண்டு பொறாமைப்படுவதே அறக்குற்றமாக முன்னர்க் கூறினாராகலின், அதுவும் குற்றமே ஆதல் பெறப்படும் என்க.

- இதற்குப் பொருள் கூறவந்த உரையாசிரியர் பலரும், வெஃகின் என்பதே அஃதாவது பிறன் பொருளைக் கவர விரும்புவதே, குடிபொன்றவும், குற்றந்தரவும் ஆன குற்றம் என்று பொருள் படும்படி பொருள் தந்துள்ளனர்.

- அது நிறைபொருளன்று. நிகழ்பொருளும் அன்று. பிறன் பொருளை விரும்புவதும், அதன்பின் அதைக் கவர நினைப்பதும், அதைக் கவர்வதும், அதன்வழிப் பல கொடுமை நிகழ்வதும் என்னும் தொடர் நிகழ்வுகளையும் அப்பொருள் உள்ளடக்கியதாதல் வேண்டும். இல்லையேல், பிறன் பொருளைக் கவர விரும்புவது ஒருவன் மனத்துள் நிகழும் குற்றமாகலின், அதைப் பிறர் கண்டு கொள்வது யாங்கன்? கண்டு கொள்ளாத வழி, குடி பொன்றலும் குற்றம் வருவதும் எவ்வாறு?

ஒருவன் நினைப்பதே இத்தனைப் புற விளைவுகளை உருவாக்கி விடுதல் உலகியலுக்கும் அறிவியலுக்கும் பொருந்துமாறில்லை. அத்துடன் அறவியலைக் கற்பனை சார்ந்த மதவியலாக ஆக்குவதும் இது. அறவியல் உலகியலுக்கும் இயங்கியலுக்கும் மாந்தவியலுக்கும் பொருந்துவதாக அமைவதே இயற்கையானது. கற்பனைகளும் இறும் பூதுகளும் (அதிசய நிகழ்வுகளும் மதவியலுக்கே பொருந்துவன. அவை மூடநம்பிக்கை உடையன. அறிவியலுக்குப் பொருந்தள்.

3. குடிபொன்றிக் குற்றமும் ஆங்கேதரும் - அஃது அவ்வாறு செய்தவனின் குடிமுறையையும், அவன் வாழ்தலுற்ற குடிமை நலத்தையும் குறையச் செய்து, அவனுக்கும் பல வகையான குற்றங்களையும் அவற்றுக்கான தண்டனைகளையும் உண்டாக்கித் தரும்.

- இது, படிப்படியாக நிகழும் ஒன்றை, உறுதி காரணமாக அதன் முடிவை

மட்டும் கூறி, விளங்க வைக்கும் புலமை உத்தி.

‘கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

குழாது செய்யும் அரசு’ - 554 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் . ஒருவந்தம் ஒல்லைக் கெடும் . - “S63 ‘ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்’ - 999

- என்பன போலும் இதில் மிகைப்படக் கூறுதலும் உடனடி நிகழ்வு

என்பதும் இல்லை. உறுதிப்பாடே உளதென்க. -