பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 அ-2-14 வெஃகாமை 18

பழியேற்படும் செயல்கள், பிறன்பொருளைக் கவர்தல், இயலாவழி அவனுக்குத் தீங்கு செய்து, அல்லது அச்சுறுத்திப் பொருளைப் பறித்தல், அதனினும் இயலா வழி அவனைக் கொல்லுதல் முதலியன.

- நடுவுநிலை உணர்வு அவனுக்கு இருப்பின், தன் பொருளைப் போலவே அவன் பொருளும் துய்ப்பதற்குரியது என்று கருதி, அதை விரும்புதலோ, கவர்தல் செய்தலோ அவனிடம் நிகழா,

- நடுவுநிலையைக் கைவிடின், அப்பழிச் செயல்கள் ஒன்றன்பின் ஒன்றாய்த்

தோன்றும் என்றார்.

- இனி, படுபயன் வெஃகுதலாவது, பிறன் பொருளைக் கவர்ந்த விடத்து,

அதால் தனக்கு விளைவித்துக் கொள்ளும் பயன்களை விரும்புதல்.

3. இது, முன்னைய குறளில் கூறப்பெற்ற நடுவின்றி நன்பொருள் வெஃகப்படும் தன்மையால் பயன்கள் விளையா, பழிதான் விளையும் என்று மேலெடுத்துக் கூறுவதால் அதனையடுத்து வைக்கப் பெற்றது, என்க. - .

களங். சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர் . – 173

பொருள்கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை: பிறன் பொருளைக் கவர்தலால் வரும் சிறுமை தரும் நிலையற்ற இன்பத்தை விரும்பி, அறன் அல்லாத, அதுவும் பிறவுமான செயல்களைச் செய்ய மாட்டார்கள், பெருமை தரும் நிலையான இன்பத்தை விரும்புபவர்கள். .

சில விளக்கக் குறிப்புகள் :

1. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யார் - (பிறன் பொருளைக் கவர்தலால் வரும் சிறுமை தரும் நிலையற்ற இன்பத்தை விரும்பி, அறன் இல்லாத (அதுவும் பிறவுமான) செயல்களைச் செய்யமாட்டார்கள். சிற்றின்பம் - சிறுமை தரும் நிலையற்ற இன்பத்தை சிற்று இன்பம் சிற்றின்பம் பயனாலும் காலத்தாலும் சிறுமை உணர்த்தப்

பெற்றதால் சிற்றின்பம் ஆனது. இஃது, இங்கு உடலின்பத்தைக் குறித்ததன்று. - - - சிற்றின்பம் என்றதால், பிறர் பொருளைக் கவர்தலால் வரும் என்னும்

கருத்து அதிகாரப் பொருள் நோக்கி வருவிக்கப் பெற்றது.